எங்களைக் கேட்காமல் கூட்டத் தொடரை நீட்டிப்பதா ?... லோக்சபாவில் வரிந்து கட்டிய எதிர்கட்சிகள்....
டெல்லி: நாடாளுமன்ற கூட்டத் தொடரை மேலும் 3 நாட்கள் நீட்டித்தற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
லோக்சபா இன்று காலை தொடங்கியதும், கூட்ட நாள் நீட்டிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணமூல் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.
தங்களை கலந்தாலோசிக்காமல் கூட்டத் தொடரை மேலும் 3 நாட்கள் நீட்டித்ததைக் கண்டித்த எதிர்கட்சி உறுப்பினர்கள், மத்திய அரசின் சர்வாதிகார போக்கை ஏற்க முடியாது என முழக்கமிட்டனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.

இந்த விவகாரத்தில் லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலையிட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தினார். மேலும் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து இது குறித்து விவாதிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
ஆனால், இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து எதிர்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவை இரு முறை ஒத்தி வைக்க நேரிட்டது.
இதே போன்று தனியார் நிதி நிறுவனத்திற்கு கடன் நீட்டிக்கட்ட விவகாரத்தில் மத்திய தணிக்கைத் துறையால் குற்றம்சாட்டப்பட்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதவி விலகக் கோரி மாநிலங்களவையிலும் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதையடுத்து அவை பல முறை ஒத்தி வைக்கப்பட்டது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications