அமேதி உள்ளிட்ட விஐபி தொகுதிகளில் ஓட்டுப்பதிவு.. 5ம் கட்ட லோக்சபா தேர்தலில் 62.56% வாக்குப்பதிவு!
லோக்சபா தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுக்க 51 தொகுதிகளில் இன்று நடக்கிறது.
Recommended Video
டெல்லி: லோக்சபா தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு, அமேதி, ரேபரேலி உட்பட நாடு முழுக்க 51 தொகுதிகளில் இன்று நடந்தது. மொத்தம், 62.56% வாக்குகள் பதிவாகியுள்ளன.
லோக்சபா தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கு வருகிறது. இந்த லோக்சபா தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 11ம் தேதி முதற்கட்ட தேர்தல் தொடங்கியது.

இது வரை நான்கு கட்ட லோக்சபா தேர்தல் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் இன்று ஐந்தாம் கட்டமாக 7 மாநிலங்களில் 51 தொகுதிகளில் மக்களவை தேர்தல் நடந்தது.
இதுவரை 374 தொகுதிகளில் தேர்தல் முடிந்துள்ளது. தமிழகத்திலும் 18 சட்டசபை மற்றும் 38 லோக்சபா தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இன்று 169 தொகுதிகளில் தேர்தல் நடக்க உள்ளது. இதில் உத்தர பிரதேசம் அதிக கவனம் பெறுகிறது.
இதுவரை நடந்த தேர்தலில் பெரிய அளவில் கலவரமோ, புகாரோ தெரிவிக்கப்படவில்லை. பல இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கோளாறு அடைந்தது. அதனால் இன்றும் பாதுகாப்பு அதேபோல் அளிக்கப்பட்டுள்ளது.
இன்று காஷ்மீரில் 2 தொகுதியில் தேர்தல் நடந்தது. அங்கு தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு இடையே பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடந்தது. மத்திய பிரதேசத்தில் 7 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இங்கு முக்கிய வேட்பாளர்கள் தேர்தலை சந்தித்தனர். ஜார்கண்டில் 4 தொகுதிகளில் தேர்தல் நடந்தது.
உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இங்கு ஐந்தாவது கட்டமாக தேர்தல் நடந்தது. இங்கு ரேபரேலி, அமேதியில் தேர்தல் நடந்தது. இங்கு முக்கிய வேட்பாளர்கள் இன்று தேர்தலை சந்தித்தனர்.
ரேபரேலியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி போட்டியிடுகிறார். அமேதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அங்கு அவரை பாஜக அமைச்சர் ஸ்மிதி இராணி எதிர்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் மேற்கு வங்கத்தில் ஐந்தாவது கட்டமாக 7 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. அங்கு ஏற்கனவே 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. பீகாரில் 5 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. ராஜஸ்தானில் 12 இடங்களில் தேர்தல் நடந்தது. இந்த தேர்தல் காரணமாக நாடு முழுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.
இப்போது வரை 7 மாநிலங்களில் பின் வரும் வாக்கு சதவிகிதம் பதிவாகி உள்ளது:
பீகார்: பீகாரில் 59.9% வாக்குப்பதிவாகி உள்ளது.
காஷ்மீர்: காஷ்மீரில் 13.35% வாக்குப்பதிவாகி உள்ளது.
மத்திய பிரதேசம்: மத்திய பிரதேசத்தில் 57.90% வாக்குப்பதிவாகி உள்ளது.
ராஜஸ்தான்: ராஜஸ்தானில் 58.80% வாக்குப்பதிவாகி உள்ளது.
உத்தர பிரதேசம்: உத்தர பிரதேசத்தில் 48.15% வாக்குப்பதிவாகி உள்ளது.
மேற்கு வங்கம்: மேற்கு வங்கத்தில் 69% வாக்குப்பதிவாகி உள்ளது.
ஜார்கண்ட்: ஜார்கண்டில் 59% வாக்குப்பதிவாகி உள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications