அசத்தும் தேர்தல் ஆணையம்.. அதிகாலையில் வாக்களித்த 5 பேருக்கு பதக்கம்.. வாக்காளர்கள் உற்சாகம்!

மேகாலயாவில் அதிகாலையிலேயே சென்று முதலில் வாக்களித்த 5 வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பாக பதக்கம் வழங்கப்பட்டு இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Lok Sabha Election : முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.. 91 தொகுதிகளில் பலப்பரீட்சை

    ஷில்லாங்: மேகாலயாவில் அதிகாலையிலேயே சென்று முதலில் வாக்களித்த 5 வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பாக பதக்கம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    நாடு முழுக்க முதற்கட்டமாக இன்று லோக்சபா தேர்தல் நடக்கிறது. ஆந்திர பிரதேசம், அருணாசலப்பிரதேசம், உத்தரகாண்ட், மிசோரம், நாகலாந்து, சிக்கிம், அந்தமான் மற்றும் நிக்கோபார், லட்சத்தீவு, தெலுங்கானா, சாம், பீகார், சட்டீஸ்கர், ஜம்மு காஷ்மீர், மஹாராஷ்டிரா, மணிப்பூர், ஒடிசா, திரிபுரா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இன்று தேர்தல் நடக்கிறது.

    Lok Sabha Election 2019: Special awards are given to voters who came first to booths

    மேகாலயாவில் தேர்தல் பலத்த பாதுகாப்புகளுக்கு இடையில் நடந்து வருகிறது. அங்கு மிகவும் மோசமான மலைப்பகுதிகளில் கூட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. உயரமான இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதனால் பொதுவாக இதுபோன்ற இடங்களில் மக்கள் வந்து வாக்களிப்பது குறைவாகவே இருக்கிறது. அதேபோல் அங்கு இன்று காலையிலேயே மழை பெய்த காரணத்தால், வாக்காளர்கள் வருவதும் குறைந்தது.

    இந்த நிலையில்தான் சரியாக 7 மணிக்கு வந்து அங்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டு இருக்கிறது.

    மேகாலயாவில் வாக்காளர்களுக்கு பதக்கம் வழங்கி கௌரவம் செய்யப்பட்டுள்ளது. மேற்கு காசி கில்ஸ் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் அதிகாலையிலேயே சென்று முதலில் வாக்களித்த 5 வாக்காளர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

    வாக்காளர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் தேர்தல் ஆணையம் இப்படி செய்துள்ளது. வேட்புமனு தாக்கலில் பரிசுகளை வென்றவர்கள் தேர்தல் ஆணையத்திற்கு நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+