அத்தனை தேர்தலிலும் 3-வது இடத்தில் பாஜக-மீண்டும் போட்டியிடும் சுரேஷ் கோபி!

Subscribe to Oneindia Tamil

திருச்சூர்: லோக்சபா தேர்தலில் கேரளா மாநிலம் திருச்சூர் லோக்சபா தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபி 2-வது முறையாக களம் காண்கிறார். 1996 முதல் திருச்சூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக ஒருமுறை கூட வெற்றி பெற்றதும் இல்லை.. ஒவ்வொரு தேர்தலிலும் பாஜகவுக்கு 3-வது இடம்தான் நிரந்தரமாக இருந்து வருகிறது.

லோக்சபா தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக நேற்று அறிவித்தது. பிரதமர் மோடி உட்பட 195 வேட்பாளர்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். மத்திய அமைச்சர்கள் 34 பேர் முதல் கட்ட வேட்பாளர்களில் இடம் பெற்றிருந்தனர்.

Lok Sabha election 2024 Suresh Gopi Contests again Thrissur- BJP s Lotus to Bloom

கேரளா வேட்பாளர்கள்: கேரளாவில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், திருவனந்தபுரம் தொகுதியிலும் மூத்த காங்கிரஸ் தலைவர் ஏகே ஆண்டனி மகன் அனில் ஆண்டனி பத்தனம்திட்டா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். நடிகர் சுரேஷ் கோபி, கேரளாவின் திருச்சூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். கேரளாவின் மொத்தம் 20 லோக்சபா தொகுதிகளில் 12 இடங்களுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.

திருச்சூரில் சுரேஷ் கோபி: நடிகர் சுரேஷ் கோபி, திருச்சூர் லோக்சபா தொகுதியில் 2-வது முறையாக போட்டியிடுகிறார். திருச்சூர் லோக்சபா தொகுதியானது குருவாயூர், மணலூர், ஒல்லூர், திருச்சூர், நட்டிகா, இரிஞ்சாலக்குடா மற்றும் புதுக்காடு சட்டசபை தொகுதிகளைக் கொண்டது. இத்தொகுதியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.

பாஜகவுக்கு பெரும் தோல்வி: 1996-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(CPI, சிபிஐ), காங்கிரஸ், பாஜக என மும்முனைப் போட்டியை எதிர்கொண்டது திருச்சூர். இத்தொகுதியில் சிபிஐ வேட்பாளர் ராகவன் 43.6% ; காங்கிரஸ் வேட்பாளராகபோட்டியிட்ட மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாகரன் 43.3% வாக்குகளைப் பெற்றனர். காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவர் கருணாகரன் வெறும் 1,480 வாக்குகளில் தோல்வியை தழுவினார். இத்தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு கிடைத்தது 5.8% வாக்குகள்தான்.

மீண்டும் சொற்ப வாக்குகள்: 2009-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் பிசி சாக்கோ 47.1% வாக்குகளையும் சிபிஐ கட்சியின் ஜெயதேவன் 44.1% வாக்குகளையும் பெற்றனர். அத்தேர்தலிலும் பாஜகவின் வேட்பாளர் 6.7% வாக்குகளைத்தான் பெற முடிந்தது.

பாஜகவுக்கு ஆறுதல் முன்னேற்றம்: ஆனால் 2014 தேர்தலில் சிபிஐ வேட்பாளர் ஜெயதேவன் 42.27%, காங்கிரஸ் கட்சியின் தனபாலன் 38.12% வாக்குகளைப் பெற்றனர். இத்தேர்தலில் பாஜகவுக்கு கூடுதலாக வாக்குகள் கிடைத்தன. பாஜகவின் சிறீசன் 11.15% வாக்குகளைப் பெற்றார்.

பாய்ச்சலுடன் முன்னேறிய பாஜக: 2019 லோக்சபா தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் வென்றது. காங்கிரஸ் கட்சியின் பிரதாபன் 39.8% வாக்குகளையும் சிபிஐ கட்சியின் ராஜீவ் மேத்யூ தாமஸ் 30.9% வாக்குகளையும் பெற்றனர். 3-வது கிடைத்த பாஜகவுக்கு இம்முறை கூடுதலாக 17.05% வாக்குகள் கிடைத்தன. 2019 தேர்தலில் நடிகர் சுரேஷ் கோபி, பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டார். அவருக்கு மொத்தம் 28.2% வாக்குகள் கிடைத்தது.

திருச்சூரில் மலருமா தாமரை?: 1996-ம் ஆண்டு தேர்தல் முதல் 2019-ம் ஆண்டு வரை பாஜக வாக்கு சதவீதத்தை திருச்சூர் லோக்சபா தொகுதியில் கணிசமாக அதிகரித்திருக்கிறது. இதனால் இம்முறை மீண்டும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் நடிகர் சுரேஷ் கோபி 2-வது முறையாக திருச்சூர் லோக்சபா தொகுதியில் களம் காண்கிறார். இந்த முறையாக திருச்சூரில் தாமரை மலருமா? சுரேஷ் கோபி வெற்றி பெறுவாரா? என்பது எதிர்பார்ப்பு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+