மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்.. ஏற்றார் லோக்சபா சபாநாயகர் சுமித்ரா
லோக் சபாவில் மத்திய அரசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொண்டுள்ளார்.
டெல்லி: லோக் சபாவில் மத்திய அரசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொண்டுள்ளார். தெலுங்கு தேசம் கட்சி சார்பாக கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தற்போது மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் எல்லோரும் ஒன்று கூடி இருக்கிறார்கள். முக்கியமாக தெலுங்கு தேசம் கட்சிக்கும் மத்திய பாஜக அரசுக்கு இடையே பிரச்சனை வலுத்து இருக்கிறது. ஆந்திராவின் நீண்ட நாள் கோரிக்கையான சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கு தொடர்ந்து மத்திய அரசு காலதாமதம் செய்து வந்தது.

இதனால் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் பிளவு ஏற்பட்டது. சிறப்பு அந்தஸ்து தருவதில் மத்திய அரசு மறுப்பு தெரிவிப்பதால் மத்திய அமைச்சரவை உடைந்தது. இதனால் அமைச்சரவையில் இருந்து தெலுங்குதேசம் அமைச்சர்கள் ராஜினாமா செய்தார்கள்.
அதேபோல் மத்திய அரசுக்கும் மற்ற மாநில கட்சிகளுக்கும் இடையில் பெரிய பிரச்சனை நிலவி வருகிறது . இந்த நிலையில் மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சேர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து இருக்கிறது.
ஏற்கனவே மத்திய அரசுக்கு எதிராக கடந்த கூட்டத்தொடரில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால் அப்போது கடைசிவரை அவையில் தீர்மானம் தாக்கல் செய்யப்படவில்லை. ஆனால் இந்த முறை தீர்மானம் வெற்றிகரமாக தாக்கல் செய்துள்ளனர்.
காங்கிரஸ் மற்றும் தெலுங்குதேசம் சார்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. காங்கிரஸ் எம்.பி., ஜோதிராதித்யா சிந்தியா தீர்மானம் கொண்டு வந்தார். தெலுங்கு தேசம் சார்பில் முதலில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.தெலுங்கு தேசம் கட்சி சார்பாக கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
50க்கும் அதிகமான கட்சிகள் தீர்மானத்தை ஏற்றுகொண்டுள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றார். இந்த தீர்மானம் மீது விவாதம் நடப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications