ஆம் ஆத்மி கட்சியை பாருங்க, நாம் மாற வேண்டிய நேரம் வந்தாச்சு: சொல்கிறது காங்.
டெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் அபார வெற்றியால் அரசியல் கட்சிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காலத்திற்கேற்ப மாற வேண்டும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சி ஆம் ஆத்மி கட்சியிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். இந்நிலையில் காலத்திற்கேற்ப நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ஜா கூறுகையில்,
எந்த கட்சியும் தனக்கான கூட்டுக்குள் முடங்கிவிடக் கூடாது என்று தான் காங்கிரஸ் துணை தலைவர் தெரிவித்தார். மாறிக் கொண்டிருக்கும் இந்தியாவில் மக்கள் கேள்விகள் கேட்கிறார்கள். அரசியல் கட்சிகளும் அது போல் மாற வேண்டும். சமூகத்தில் அல்லது வாக்காளர்களின் நடைமுறைகளில் ஏதேனும் மாற்றம் உள்ளதா என்பதை அரசியல் கட்சிகள் கண்கானிக்க வேண்டும் என்றார்.
கடந்த மாதம் வரை பெரிதாக கண்டுக் கொள்ளப்படாத ஆம் ஆத்மி கட்சியின் எளிமை, விஜபி பகட்டு இல்லாமை, எதிலும் ஒளிவு மறைவு இல்லாமல் இருப்பது அரசியல் கட்சிகளிடையே மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக பதவி ஏற்ற ஒரு வாரம் கழித்து ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜி தனக்கு என பங்களா மற்றும் சிவப்பு விளக்கு பொருத்திய கார் வேண்டாம் என்று தெரிவித்துவிட்டார். மேலும் உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் தனது பாதுகாப்பு படையின் எண்ணிக்கையை பாதியாக குறைத்துவிட்டார்.












Click it and Unblock the Notifications