வங்கக்கடல் பகுதியில் வலுவான நிலையில் காற்றழுத்த தாழ்வுபகுதி.. வட மாவட்டங்களில் கனமழை வெளுக்குமாம்!
வங்க கடல் பகுதியில் வலுவான நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video

டெல்லி: வங்க கடல் பகுதியில் வலுவான நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழக வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக மாலை நேரங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவு தொடங்கிய மழை விடிய விடிய வெளுத்து வாங்கியது. இதனால் சென்னை நகர் முழுவதும் சில்லென ஆகியுள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி
இந்நிலையில் வங்க கடல் பகுதியில் வலுவான நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் வட மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

மேற்கில் நகரும்
வளிமண்டல மேலடுக்கில் நிலவி வந்த காற்று சுழற்சி நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மேற்கு திசைநோக்கி வடமேற்கு வங்க கடலில் நகர்ந்து வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடல் பகுதியில் மையம் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் புதுச்சேரியில்
நாளைக்குள் தெற்கு ஒடிசாவை கடந்து சட்டீஸ்கர் மற்றும் மத்தியபிரதேசம் நோக்கி செல்லும் என கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, அந்தமான், தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்துக்கு பெரிய அளவில் மழை வாய்ப்பில்லை என்றாலும் தமிழக வடமாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications