மும்பையில் பெண் பலாத்காரம் செய்த கேஸ் டெலிவரி செய்யும் நபர்!
மும்பை: மும்பையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கேஸ் டெலிவரி செய்தவர் மற்றும் அவரது நண்பர் கொடுரமாக பாலியல் பலத்காரம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் இருந்து ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆன புதுமண தம்பதி ஒன்று மும்பை அருகே உள்ள அந்தேரி கிழக்கு பகுதியில் வசித்து வந்தனர். கணவன் வேலைக்கு சென்றதும் புதுமணப்பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார்.
இதனை தனியார் கேஸ் ஏஜென்சியில் சிலிண்டர் டெலிவரி செய்யும் சந்தன் ஜெய்வால் நோட்டம் விட்டு வந்து உள்ளான்.
வியாழக்கிழமையன்று அந்தப் பெண்ணின் கணவர் வேலைக்கு சென்றதும் வீட்டில் புதுப்பெண் மட்டும் தனியாக இருந்து உள்ளார். இதைபயன்படுத்தி கொண்ட சந்தன் தனது நண்பன் முகமது ஆலம் என்பவனையும் அழைத்துகொண்டு புதுப்பெண்ணின் வீட்டிற்கு சென்று கேஸ் அடுப்பை சரிசெய்ய வேண்டும் என கூறி உள்ளான்.
பின்னர் இருவரும் கதவை உள்பக்கமாக பூட்டி விட்டனர். இதை பார்த்து அந்த பெண் கூச்சல் போட்டு உள்ளார் இருந்தாலும் இருவரும் சேர்ந்து அந்த பெண்ணின் வாயில் துணியை வைத்து அடைத்து பலாத்காரம் செய்துள்ளனர். இதில் அந்த பெண் மயக்க அடைந்து விழுந்து உள்ளார்.
அந்த பெண் இறந்து விட்டதாக கருதிய இருவரும் தப்பி ஓடி விட்டனர். வேலை முடிந்து திரும்பிய கணவர் மனைவியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார் பின்னர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்து உள்ளனர்.
போலீசார் விசாரணையில் அருகில் உள்ள தனியார் கேஸ் நிறுவன ஊழியர் மற்றும் அவரது நணபரரை போலீசார் 4 மணி நேரத்தில் கைது செய்து உள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அவர்கள் இருவரையும் பிப்ரவரி 6-ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications