For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

5வது கட்ட லோக்சபா தேர்தல்: 15 மாநிலங்களில் 122 தொகுதிகளில் பிரசாரம் இன்று ஓய்வு!!

By Mathi
|

டெல்லி: 5வது கட்ட லோக்சபா தேர்தல் நடைபெறும் 122 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது.

நாட்டின் 16வது லோக்சபாவுக்கான தேர்தல் ஏப்ரல் 7ந் தேதி முதல் மே 12ந் தேதி வரையில் 9 கட்டங்களாக நடத்தப்படுகிறது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் இதுவரையில் 4 கட்டங்களாக நடந்த தேர்தலில் 112 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடந்து முடிந்துள்ளது.

வாக்குப்பதிவு நடந்த தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்குகள் எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 431 தொகுதிகளில் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

LS poll campaign to end today in 122 seats

5வது கட்ட தேர்தல் நாளை மறுநாள் 122 தொகுதிகளில் நடைபெற உள்ளது. மொத்தம் 12 மாநிலங்களில் இத்தொகுதிகள் உள்ளன.

அசாமில் 6 தொகுதிகளிலும் பீகார், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தலா 7 தொகுதிகளிலும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஒரு தொகுதியிலும், ஜார்கண்டில் 5 தொகுதிகளிலும், கர்நாடகாவில் 28 தொகுதிகளிலும், மத்தியப் பிரதேசத்தில் 10 தொகுதிகளிலும், மகாராஷ்டிராவில் 19 தொகுதிகளிலும், மணிப்பூரில் ஒரு தொகுதியிலும், ஒடிசாவில் 11 தொகுதிகளிலும், ராஜஸ்தானில் 20 தொகுதிகளிலும், உத்தரப் பிரதேசத்தில் 11 தொகுதிகளிலும், மேற்கு வங்கத்தில் 4 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இத்தொகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது.

English summary
As the campaign for fifth phase of Lok Sabha elections polling in 122 seats to end today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X