மார்ச் 2 அல்லது 3ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு?
டெல்லி: நாடாளுமன்றத் தேர்தல் தேதி மார்ச் 2 அல்லது 3ம் தேதி அறிவிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் தேர்தல் 5 அல்லது 6 கட்டங்களாக நடத்தப்படும் என்றும் தெரிகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறலாம். அப்போது புதுச்சேரிக்கும் சேர்த்தே தேர்தல் நடத்தப்படும்.

15வது நாடாளுமன்றம் முடிந்தது
15வது நாடாளுமன்றத்தின் கடைசிக் கூட்டம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதையடுத்து தேர்தல் தேதியை அறிவிக்க தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.

மார்ச் 2 அல்லது 3ம் தேதி
மார்ச் 2 அல்லது 3ம் தேதி தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

எத்தனை கட்டங்களாக
தேர்தல் 5 அல்லது 6 கட்டங்களாக நடத்தப்படும் என்று தெரிகிறது. கடந்த 2009ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலின்போது பிப்ரவரி கடைசியில் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம். அதேபோல இந்த முறையும் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

கடந்த முறை 5 கட்டம்
கடந்த லோக்சபா தேர்தல் 5 கட்டங்களாக நடத்தப்பட்டது. தற்போது 6 கட்டங்களுக்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

பூர்வாங்க வேலைகள் ஜரூர்
ஏற்கனவே தேர்தல் தொடர்பான பூர்வாங்க வேலைகளை தேர்தல் ஆணையம் தொடங்கி விட்டது. அவை ஜரூராக நடந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications