தன்னை பலாத்காரம் செய்ய முயன்ற நபரை பிடித்து நையப்புடைத்த பெண்: தீயாக பரவும் வீடியோ
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நபரை பிடித்து பொது இடத்தில் வைத்து இளம்பெண் ஒருவர் அடித்து நொறுக்கியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை ஆண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அந்த நபரை பிடித்து இழுத்து வந்து பொது இடத்தில் வைத்து அடித்து நொறுக்கினார்.

அடிக்கையில் அவரின் செயலை சொல்லி சொல்லி திட்டி அடித்தார். தன்னை விட்டுவிடுமாறு அந்த நபர் கேட்டார். ஆனால் அந்த பெண் தனது கோபம் தீரும் வரை அவரை அடித்தார். இந்த சம்பவத்தை பார்த்த ஒருவர் வீடியோ எடுத்து அதை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ இணையதளத்தில் மிகவும் பிரபலம் ஆகியுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் அவ்வப்போது பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக செய்திகள் வருகிறது. என்னவென்று மாநில முதல்வர் அகிலேஷ் யாதவிடம் கேட்டால் மீடியாக்கள் ஏன் எப்பொழுது பார்த்தாலும் என் மாநிலத்தையே கவனித்துக் கொண்டிருக்கிறது என தெரியவில்லை என்றார்.
4 பேர் எப்படி ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முடியும் என்று கூறிய சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications