For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மிக மோசமாக மாசடைந்த பகுதிகள்... மெட்ராஸ் ஐஐடிக்கு 2வது இடம்!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவிலேயே மிக அதிகமாக மாசு நிறைந்த பகுதிகளின் பட்டியலில் சென்னை ஐஐடிக்கு 2வது இடம் கிடைத்துள்ளது. இந்தப் பட்டியலில் லக்னோவில் உள்ள மத்திய பள்ளிக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

லக்னோ பள்ளியில்தான் நாட்டிலேயே அதிக அளவிலான மாசு இருக்கிறதாம். அதாவது பிஎம் (suspended particulate matter)அளவில் 2.5 ஆகும்.

டெல்லியின் அனந்த் விஹார் 3வது இடத்தில் உள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

நுண்துகள்கள்...

நுண்துகள்கள்...

பிஎம் 2.5 என்பது மிகவும் அபாயகரமான நுண்துகள்கள் அடங்கியதாகும். இது நுரையீரலில் புகுந்து பெரும் பாதிப்பை உண்டு செய்யும்.

லக்னோ பள்ளியில்...

லக்னோ பள்ளியில்...

லக்னோ பள்ளியில் நேற்று பிற்பகலில் நடந்த ஆய்வின்போது இதுபோன்ற 477 நுன் துகள்கள் இருந்ததாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னை ஐஐடி...

சென்னை ஐஐடி...

அதேபோல சென்னையில் உள்ள ஐஐடி வளாகத்தில் நடந்த ஆய்வின்போது 474 நுண்துகள்கள் இருந்ததாக அளவிடப்பட்டது. அனந்த் விஹாரில் 469 துகள்கள் இருந்ததாக தெரிய வந்துள்ளது.

3 இடங்களில்...

3 இடங்களில்...

லக்னோவில் மொத்தம் 3 இடங்களில் பிஎம் 2.5 உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. நாட்டிலேயே மோசமான 10 மாசடைந்த பகுதிகலில் லக்னோவுக்கு முக்கிய இடம் கிடைத்துள்ளது.

டெல்லியில்...

டெல்லியில்...

இருப்பினும் அதிக அளவிலான மாசு பகுதியாக பீதிக்குள்ளாகியுள்ள டெல்லியில் கடந்த நான்கு நாடுகளில் மாசு அளவு குறைந்து வருகிறதாம்.

English summary
A central school in Uttar Pradesh's capital city, Lucknow, has recorded the highest level of suspended particulate matter, PM 2.5 today, followed by the Indian Institute of Technology (IIT), Madras, while Delhi's Anand Vihar stood third according to the latest report by the Central Pollution Control Board (CPCB).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X