பிரபல பாலிவுட் பாடல் ஆசிரியரின் மகன், மனைவி ரயில் முன்பு குதித்து தற்கொலை
டெல்லி: பிரபல பாலிவுட் பாடல் ஆசிரியர் சந்தோஷ் ஆனந்தின் மகன் பேராசிரியர் சங்கல்ப் ஆனந்த் தனது மனைவியுடன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
பிரபல பாலிவுட் பாடல் ஆசிரியர் சந்தோஷ் ஆனந்த். அவரது மகன் சங்கல்ப் ஆனந்த்(38) டெல்லியில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் பேராசிரியராக இருந்தார். அவர் தனது மனைவி நந்தினி(34) மற்றும் மகள் ரிதிமா(7) ஆகியோருடன் டெல்லியில் உள்ள சுக்தேவ் விகார் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 15ம் தேதி அவர் தனது ஃபோக்ஸ்வேகன் காரில் மனைவி மற்றும் மகளுடன் கோசிகலான் சென்றார். அங்கு காரை நிறுத்துவிட்டு ரயில் தண்டவாளத்திற்கு சென்றனர்.
ரயில் வரும் நேரமாகிறது அங்கு செல்லாதீர்கள் என்று ரயில்வே ஊழியர் ஒருவர் தெரிவித்துவிட்டு சென்றுள்ளார். சங்கல்ப், நந்தினி ஆகியோர் ஆக்ரா-டெல்லி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் முன்பு குதித்து தற்கொலை செய்து கொண்டனர். மகளை மட்டும் ரயில் வருகையில் தண்டவாளத்திற்கு வெளியே தள்ளிவிட்டனர். இதில் சிறுமி காயங்களுடன் பிழைத்துக் கொண்டார்.
அவர்களின் உடல்களில் இருந்து 2 செல்போன்கள், ரூ.65 ஆயிரம் ரொக்கம், 10 பக்கம் கொண்ட கடிதம் ஆகியவை எடுக்கப்பட்டன. நிதி பிரச்சனையால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அதில் தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனைக்கு பிறகு அவர்களின் உடல்கள் சந்தோஷ் ஆனந்திடம் ஒப்படைக்கப்பட்டன. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications