உச்சக்கட்ட பயங்கரம்..ரத்தப்போக்குடன் ரோடெல்லாம் கெஞ்சிய பெண்.. "அவனை தூக்குல போடுங்க".. சீறிய தந்தை
போபால்: 12 வயது சிறுமியை பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் கைதாகி உள்ளார்.. என் மகனை தூக்கில் போடுங்கள் என்று இந்த ஆட்டோ டிரைவரின் அப்பா செய்தியாளர்களிடம் ஆவேசமாக கூறியிருக்கிறார்.
மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனியில் இப்படி ஒரு கொடூரம் நடந்துள்ளது.. உஜ்ஜைனியிலிருந்து கிட்டத்தட்ட 15 கிமீ தொலைவில், பொதுவெளியில், நட்டநடுரோட்டில், இந்த பகீர் நடந்துள்ளது.

அந்த சிறுமிக்கு 12 வயது இருக்கும்.. பட்நகர் சாலையில் இந்த சிறுமியை வெறிபிடித்து மனிதகும்பல் பலாத்காரம் செய்துள்ளது.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இந்த சிறுமி, அங்கேயே மயக்கம்போட்டு விழுந்துள்ளார்..
சிறுமி மயங்கியதுமே, அந்த கும்பல் அந்த ரோட்டிலேயே சிறுமியை வீசிவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.. மயக்கம் தெளியும்வரை சிறுமி ரோட்டிலேயே விழுந்து கிடந்திருக்கிறாள்.
ரத்தப்போக்கு: சிறிது நேரம்கழித்து, மயக்கம் தெளிந்து கண்விழித்து பார்த்தால், அரைநிர்வாண கோலத்தில் இருப்பதை கண்டாள்.. வன்கொடுமை செய்யப்பட்டதில், நிறைய ரத்தப்போக்கும் ஏற்பட்டுக் கொண்டிருந்தது.. இதனால், என்ன செய்வதென்றே தெரியாமல், அந்த சிறுமி வீடு வீடாக சென்று உதவி கேட்டாள்.. யாருமே உதவவில்லை.. அதுமட்டுமல்ல, அவளது உடலில் ரத்தத்தை பார்த்ததுமே, வெறுப்பையும், கோபத்தையும் உமிழ்ந்துவிட்டு சென்றனர்..
ஒரு நபரிடம் உதவி கேட்க சிறுமி முயன்றபோது, அந்த கொடூரனோ, ஈவிரக்கமில்லாமல் சிறுமியை கோபத்துடன் விரட்டியடித்தான்.. எந்த ஆதரவுமே கிடைக்காத நிலையல், கடைசியாக ஒரு ஆசிரமத்திற்குள் நுழைந்தாள் சிறுமி.. அங்கேயிருந்த சாமியார் சிறுமியின் கோலத்தை பார்த்ததுமே அதிர்ச்சியடைந்தார்.. அப்போது மணி விடிகாலை 3 மணி.
துணி: யாரோ பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள் என்று சந்தேகப்பட்டு, உடனடியாக அந்த சிறுமிக்கு ஒரு துணியை போர்த்தி உடம்பை மறைத்தார்.. பிறகு, அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்.. டாக்டர்கள் சிறுமியை பரிசோதித்துவிட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை உறுதி செய்தனர்.
ஆனால், உடம்பெல்லாம் காயங்கள் அதிகமாக இருந்ததால், அவசர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றார்கள்.. இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக இந்தூர் மருத்துவமனையில் சிறுமியை அனுமதித்தார்கள்.. உடனடியாக ரத்தம் செலுத்த வேண்டும் என்று மருத்துவமனை சொன்னதால், சிறுமியை பாதுகாப்புக்காக அழைத்து சென்ற போலீசாரே ரத்தம் தந்து சிறுமிக்கு உதவினார்கள்.. இதையடுத்து, சிறுமிக்கு சிகிச்சை ஆரம்பமானது..
ஆபரேஷன்: சிறுமிக்கு சிகிச்சை அளித்த டாக்டர் அசோக் லத்தா சொல்லும்போது, "பாலியல் வன்கொடுமையால் சிறுமி மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது" என்றார்.
சிறுமி பெயர்: இதுகுறித்து போலீசாருக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.. போலீசார் விரைந்து வந்து சிறுமியிடம் பேச முயன்றனர்.. ஆனால், சிறுமியால் தன்னுடைய பெயரைகூட சரியாக சொல்ல முடியவில்லை. உடல்நிலையும் மனநிலைமையும் மிக மோசமாக இருந்தது.. அதனால், சிறுமியின் பெயர், அங்கே வசிக்கிறார் என்ற விவரங்களை உடனடியாக பெற முடியவில்லை..
எனினும் சிறுமியின் உச்சரிப்பு வைத்து பார்த்ததில், அநேகமாக உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜை சேர்ந்தவராக இருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் சந்தேகப்பட்டனர். அதிரடி விசாரணையிலும் குதித்தனர்.
ஆட்டோ டிரைவர்: சுமார் 72 மணி நேர சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, 6 ஆட்டோ டிரைவர்கள் பிடித்திருக்கிறார்கள்.. அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது... இதில், ஆட்டோ டிரைவர் பாரத் சோனி என்பவர்தான் முதலில் சிறுமியை சந்தித்திருக்கிறார்.. இவருக்கு 38 வயதாகிறது..
இவரது ஆட்டோவில் ரத்தக்கறை படிந்திருக்கிறது. இதையடுத்து, அவர் மீதான சந்தேகம் அதிகமானது.. மரபணு சோதனைக்கும் உட்படுத்தப்பட்டார்.. அதேபோல, மற்ற ஆட்டோ ஓட்டுநர்களின் மரபணுக்களையும் சோதனையும் ஆரம்பமானது..
இந்நிலையில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஆட்டோ டிரைவர் பாரத் சோனி என்பவர் கைது செய்யப்பட்டார். அவரது கை, கால்களில் காயங்கள் இருந்தன... இதுகுறித்து போலீஸார் சொல்லும்போது, குற்றம் நடந்த இடத்தில் விசாரிக்கவும், சிறுமியின் கிழிந்த ஆடைகளை சேகரிக்கவும் சம்பவ இடத்திற்கு பாரத் சோனியை அழைத்துச் சென்றோம். அப்போது அவர் தப்பிச் செல்ல முயன்றபோது சாலையில் விழுந்து காயம் ஏற்பட்டது" என்றனர்.
அப்பா ஆவேசம்: இதனிடையே தன்னுடைய மகனை தூக்கிலிட வேண்டும் என்று ஆட்டோ டிரைவர் பாரத் சோனியின் அப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்... இதுகுறித்து அவர் சொல்லும்போது, "என்னுடைய மகன் செய்தது வெட்கக்கேடான செயல்... என்னுடைய மகனை சந்திக்க மருத்துவமனைக்கோ, போலீசுக்கோ கோர்ட்டுக்கோ நான் செல்லவில்லை. என் மகன் குற்றம் செய்து விட்டான்.. அதனால் அவனைத் தூக்கிலிட வேண்டும்" என்று செய்தியாளர்களிடம் ஆவேசமாக கூறியிருக்கிறார்.
இந்த சம்பவத்தின் அதிர்ச்சி இன்னும் அடங்கவில்லை.. சம்பவத்தன்று, வழியெல்லாம் உடலில் ரத்தம் சொட்ட சொட்ட சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகளில் அவர் உதவி கேட்டாராம்.. ஆனால் யாரும் உதவி செய்யவில்லையாம். சிறுமிக்கு இன்னும் சிகிச்சை நடந்து வருகிறதாம்.. முழுமையாக குணமடைந்தபிறகுதான் குடும்பத்தினரிடம் ஒப்படைப்போம் என்கிறார்கள் போலீசார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications