சோனமுத்தா சோலிமுடிஞ்சா? ம.பி.யில் பாஜகவுக்கு செம்ம சாவு பயம் காட்டும் சர்வேக்கள்- பீதியில் டெல்லி!
போபால்: மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் தொடர்பான அனைத்து கருத்து கணிப்புகளுமே பாஜக ஆட்சியை பறிகொடுத்து படுதோல்வியை சந்திக்கும் என்கின்றன. ம.பி. தேர்தல் தொடர்பான ஒரு சர்வே கூட தங்களுக்கு சாதகமானதாக இல்லாததால் டெல்லி பாஜக மேலிடம் கடும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறதாம்.
மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வென்றது. மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 இடங்கள். இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 116. இதர கட்சிகள் துணையுடன் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. மத்திய பிரதேசத்தில் பாஜகவின் ஆதிக்கத்துக்கு காங்கிரஸ் முடிவு கட்டிய மகிழ்ச்சியில் அரியணை ஏறியது. ஆனால் இந்த மகிழ்ச்சி தொடர்ந்து நீடிக்கவில்லை. கடந்த 2020-ம் ஆண்டு 6 அமைச்சர்கள் உட்பட 22 எம்.எல்.ஏக்கள், ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். இதனால் முதல்வராக இருந்த கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டு பாஜக மீண்டும் ஆட்சியில் அமர்ந்தது. 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ம.பி.யில் உள்ள மொத்தம் 29 தொகுதிகளில் 28-ல் பாஜக வென்றது.

இப்போது மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்டது. இந்த தேர்தலில் பாஜக ஆட்சியைத் தக்க வைப்பது அவ்வளவு சுலபமானது அல்ல என்பதே களநிலவரங்கள் சொல்லும் செய்தி. மத்திய பிரதேசத்தில் இதுவரை பாஜக- காங்கிரஸ் நேரடி மோதல் இருந்து வந்தது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மியும் களமிறங்க உள்ளது. பாஜக ஆட்சி மீதான அதிருப்தி வாக்குகளை அறுவடை செய்ய முடியும் என கணக்குப் போடுகிறது ஆம் ஆத்மி.
இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிதான் மீண்டும் வெல்லும் என்ற பெருநம்பிக்கையில் அக்கட்சியின் தலைவர்கள் உள்ளனர். இதற்கு பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கம் எடுத்த ம.பி. தேர்தல் தொடர்பான கருத்து கணிப்பையே காங்கிரஸ் தலைவர்கள் சுட்டிக்காட்டுகின்றன. ம.பி.யில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிதான் வரும் என ஆர்.எஸ்.எஸ். கருத்து கணிப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாம்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கருத்து கணிப்பு மட்டுமல்ல.. மேலும் 6 கருத்து கணிப்புகளுமே காங்கிரஸ்தான் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என அடித்துச் சொல்லுகின்றனவாம். கடந்த ஜனவரி மாதம் வெளியான ஒரு கருத்து கணிப்பில் பாஜகவுக்கு 103 இடங்கள்தான் கிடைக்கும்; ஆட்சியை பறிகொடுக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. பிப்ரவரி மாதத்தில் காங்கிரஸ் கட்சி எடுத்த அதிகாரப்பூர்வ கருத்து கணிப்பில் கூட பாஜகவுக்கு 95 இடங்கள்தான் கிடைக்கும் என தெரியவந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம், ம.பி. மாநில உளவுத்துறையின் கருத்து கணிப்பு ஒன்று வெளிச்சத்துக்கு வந்தது. அதில் பாஜகவுக்கு 80-க்கும் குறைவான இடங்கள்தான் கிடைக்கும் என்கிற அதிர்ச்சி முடிவுகள் இடம்பெற்றிருந்தன. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் Dainik Bhaskar உள்ளிட்டவை நடத்திய கருத்து கணிப்புகளில் வெறும் 70 இடங்களைத்தான் பாஜக பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த மே மாதம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் பாஜகவுக்கு 65 இடங்கள்தான் கிடைக்கும் என முடிவுகள் தெரிவிக்கின்றனவாம். தற்போது Navbharat Samachar ஒரு கருத்து கணிப்பை வெளியிட்டிருக்கிறது. அதில் பாஜகவுக்கு 55 இடங்கள்தான் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
அதாவது மத்திய பிரதேச மாநிலம் தொடர்பான அனைத்து தேர்தல் கணிப்புகளிலும் பாஜக பெரும் தோல்வியை சந்திக்கும்; அதுவும் வெறும் 55 இடங்கள்தான் பெறும்; காங்கிரஸ் கட்சி அமோக வெற்றியை அறுவடை செய்யும் என்பதாகவே இடம்பெற்றுள்ளன. இதனால்தான் காங்கிரஸ் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறதாம் ம.பி.யில்!
சாவு பயத்தை காட்டுறாங்க பரமா மோடில் பாஜக!
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications