தேர்தல் வரப் போகுது- மத்திய பிரதேசத்தில் பாஜகவுக்கு செம்ம ஷாக்.. மாஜி முதல்வர் உமாபாரதி கலகக் குரல்!
போபால்: மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் மூத்த பாஜக தலைவரும் முன்னாள் முதல்வருமான உமாபாரதி அதிருப்தி குரலை வெளிப்படுத்தி இருப்பது அக்கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. பாஜகவில் ஓரம்கட்டப்பட்டிருந்த உமாபாரதி இப்போது பாஜகவுக்கு எதிராக கலகக் குரல் எழுப்புவதை அக்கட்சி தலைவர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
மத்திய பிரதேச சட்டசபையில் மொத்தம் 230 இடங்கள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 116 எம்.எல்.ஏக்கள். மத்திய பிரதேச சட்டசபைக்கு கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது.

ம.பி. தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114; பாஜக 109 இடங்களைப் பெற்றன. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சி கூட்டணி கட்சிகளுடன் இணைந்து 121 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் ஆட்சியை அமைத்து. காங்கிரஸின் மூத்த தலைவர் கமல்நாத் மாநில முதல்வரானார். ஆனால் இதனை பாஜகவால் ஜீரணிக்கவே முடியவில்லை. கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை தொடக்கம் முதலே கவிழ்ப்பதில் ஆபரேஷன் லோட்டஸ் ஆயுதத்தை பாஜக கையில் ஏந்தி இருந்தது.
ம.பி. காங்கிரஸில் முதல்வர் கமல்நாத்துக்கு எதிராக மற்றொரு தலைவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா கலகக் குரல் எழுப்பினார். அவருக்குப் பின்னால் 22 எம்.எல்.ஏக்கள் அணிதிரண்டனர். பிறகு என்ன பாஜகவுக்கு தேவை? பாஜகவின் ஆலோசனைப் படி 6 அமைச்சர்கள் உட்பட 22 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்தனர். இதனால் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுத்தது. பின்னர் பாஜக ஆட்சி அமைத்தது. சிவராஜ்சிங் சவுகான், முதல்வரானார்.
இந்நிலையில் இந்த ஆண்டு ம.பி. தேர்தல் நடைபெற உள்ளது. மத்திய பிரதேசத்தைப் பொறுத்தவரையில் மூத்த பாஜக தலைவர் முன்னாள் முதல்வர் உமாபாரதி. பாஜக, பிராமணர்களுக்கான கட்சி என முத்திரை குத்தப்பட்ட தொடக்க காலங்களில் ஓபிசி (லோதி ஜாதி)யை சேர்ந்த உமாபாரதியை முன்வைத்து அனைத்து ஜாதியினரும் பாஜகவில் இருக்கின்றனர் என பிரசாரம் செய்தது பாஜக. பாஜகவின் வாக்கு வங்கியாகவே லோதி ஜாதியும் இருந்து வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக உமாபாரதி சீனிலேயே இல்லை.. அந்த அளவு ஒதுக்கிவைக்கப்பட்டார்.
இப்போது ம.பி. தேர்தல் நெருங்கும் நிலையில் உமாபாரதி எனும் புயல் மையம் கொள்ள தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் லோதி ஜாதியினரிடையே உமாபாரதி பேச்சு பேச்சுதான் இப்போது போபால் முதல் டெல்லி வரை பாஜகவினரை ஆடிப் போக வைத்திருக்கிறது. நான் என்னதான் பாஜகவின் தீவிர உறுப்பினராக இருந்தாலும் பாஜகவுக்குதான் நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று விரும்புவேன். ஆனால் இனிவரும் தேர்தலில் நீங்கள் சொந்தமாகவே முடிவெடுத்து செயல்படுங்கள் என சொல்லிவிட்டார் உமாபாரதி. அதாவது பாஜகவுக்கு ஓட்டுப் போடத்தான் வேண்டும் என வலியுறுத்தாமல் உமாபாரதி பேசியிருப்பதுதான் அக்கட்சியினருக்கு அச்சமாகிப் போயிருக்கிறது. மேலும் ம.பி.யில் மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி அடுத்தடுத்த போராட்டங்களையும் உமாபாரதி மேற்கொள்ள இருக்கிறார். இதனால் பாஜக மேலிடம் ரொம்பத்தான் ஆடிப் போய்விட்டது என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.
-
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications