மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி காலி! காங்கிரஸ் கட்சிக்கு கலக்கல் வெற்றி கன்பார்ம்.. புது சர்வே

Subscribe to Oneindia Tamil

போபால்: மத்தியப் பிரதேசத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கே யார் வெல்வார்கள் என்பது குறித்து டைம்ஸ் நவ் நவ்பாரத் இடிஜி இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.

இன்னும் சில மாதங்களில் மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் நடைபெறுகிறது. அங்கே பாஜக, காங்கிரஸ் இடையே நேரடி போட்டி இருக்கிறது. ஆளும் கட்சியாக உள்ள பாஜக ஆட்சியைத் தக்க வைக்கப் பார்க்கும் நிலையில், காங்கிரஸ் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளது.

 Madhya Pradesh Assembly Election Opinion Polls Congress has slight edge over BJP

மத்தியப் பிரதேசம்: 2018 தேர்தலில் பாஜகவுக்கு109 இடங்கள் மட்டுமே கிடைத்த நிலையில், காங்கிரஸ் கட்சி 114 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. தொடர்ந்து கமல்நாத் மத்தியப் பிரதேச முதலமைச்சராகப் பதவியேற்றார். இருப்பினும், அங்கே காங்கிரஸ் ஆட்சி 15 மாதங்கள் மட்டுமே நீட்டித்தது.

அங்கு அப்போது காங்கிரஸின் முக்கிய தலைவராக இருந்த சிந்தியா போர்க்கொடி தூக்க, அவருடன் 22 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து பாஜகவில் ஐக்கியமானார்கள். இதனால் கமல்நாத் ஆட்சி கவிழ்ந்தது. மீண்டும் சவுஹான் முதல்வரானார்.

டைம்ஸ் நவ் சர்வே: மத்தியப் பிரதேசத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடக்கும் நிலையில், இது குறித்து டைம்ஸ் நவ் நவ்பாரத் இடிஜி இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. இதில் மத்தியப் பிரதேசத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

இரு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் இறங்கி இருக்கும் நிலையில் போட்டி கடுமையாக இருக்கும். இந்தத் தேர்தலில் இரு கட்சிகளுமே 42 சதவீத வாக்குகளைப் பெறும் என்று டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.

வெல்லப்போவது யார்: மத்தியப் பிரதேசத்தில் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, 42.80% வாக்குகளுடன் பாஜக 102-110 இடங்களை வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. மறுபுறம் காங்கிரஸ் கட்சி 43.80% வாக்குகளுடன் 118-128 இடங்களையும் கைப்பற்றும் என்று அந்த சர்வே-இல் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் மற்ற கட்சிகள் 13.40% வாக்குகளுடன் 0-2 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசம் தேர்தலில் மண்டலம் வாரியாக நாம் பார்க்கும் போது, மால்வா நிமரில் காங்கிரஸ் 41-45 இடங்களைக் கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது. இங்கே பாஜகவுக்கு 20-24 இடங்கள் மட்டுமே கிடைக்கும். அங்குள்ள மகாகௌஷலில் பாஜகவுக்கு 18-22 இடங்களும் காங்கிரஸ் கட்சிக்கு 16-20 இடங்களும் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

பிராந்தியம் வாரியாக: அங்குள்ள குவாலியர் சம்பலில் காங்கிரஸ் கட்சிக்கே மிகப் பெரிய அட்வான்டேஜ். அங்கே காங்கிரஸ் 26-30 இடங்களைக் கைப்பற்றும் எனக் கூறப்பட்டுள்ளது. மறுபுறம் அங்கே பாஜக வெறும் 4-8 இடங்களில் மட்டுமே வெல்லுமாம். அதேநேரம் மத்திய பாரத் பகுதியில் காங்கிரசை விட பாஜகவுக்கு ஆதரவு அதிகமாக இருக்கிறது. அங்கே பாஜகவுக்கு 22-24 இடங்களும் காங்கிரஸ் கட்சிக்கு 12-14 இடங்களும் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

அதேநேரம் விந்தியா பகுதியில் பாஜக 19-21 இடங்களிலும், காங்கிரஸ் 8-10 இடங்களிலும் வெற்றி பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. பண்டேல்கண்டில், பாஜக 13-15 இடங்களைப் பெறும் என்றும் காங்கிரஸ் கட்சிக்கு 11-13 இடங்கள் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

கடும் போட்டி: ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது அங்கே காங்கிரஸ் 118-128 இடங்களிலும், பாஜக 102-110 இடங்களிலும் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. கடந்த 2018 சட்டசபைத் தேர்தலில், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய இரு மாநிலங்களுடன் மத்தியப் பிரதேசத்திலும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. 230 உறுப்பினர்களைக் கொண்ட மத்தியப் பிரதேச சட்டசபையில், 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பாஜகவைக் காங்கிரஸ் 2018இல் அகற்றியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+