'முதல்வன்' பட பாணியில்.. ஊழல் அதிகாரிகள் மேடையில் வைத்து சஸ்பெண்ட்.. அதிரடி காட்டிய ம.பி முதல்வர்
போபால்: மத்திய பிரதேசத்தில் ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளான அதிகாரிகளை முதல்வன் படப் பாணியில் மேடையில் இருந்தவாறே, அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் சஸ்பென்ட் செய்தார். இது தொடர்பான வீடியோ இப்போது இணையதளங்களில் வைரலாகியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் பிரித்விபூர் தொகுதிக்கு விரைவில் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பிரித்விபூர் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அப்பகுதியில் பல்வேறு திட்டங்கள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட அவர், மேடையிலேயே ஊழல் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

மத்திய பிரதேசம்
மத்தியப் பிரதேசத்தின் பிரித்விபூர் பகுதியை அடுத்துள்ள நிவாரி என்ற இடத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் சிவராஜ் சிங் சவுஹான் கலந்து கொண்டார். அப்போது மத்திய, மாநில பாஜக அரசுகள் மக்கள் நலனை மேம்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளைப் பட்டியலிட்டார். மேலும், மத்தியப் பிரதேசத்தில் ஊழலற்ற ஆட்சி நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஊழல் அதிகாரிகள்
அப்போது பிரதமரின் அனைவருக்கும் வீடு வழக்கும் திட்டமான 'பிரதமர் ஆவாஸ் யோஜனா' திட்டத்தில் எதாவது ஊழல் நடைபெற்றுள்ளதா? ஊழல் செய்த அதிகாரிகளைத் தைரியமாகக் குறிப்பிடலாம் என முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார். அப்போது கூட்டத்தில் இருந்து மக்கள் இரண்டு அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிட்டனர். தொடர்ந்து அவர்கள் இருவரின் பெயரைக் குறிப்பிட்டே மக்கள் சத்தமிட்டனர்.

உடனடியாக சஸ்பெண்ட்
இதையடுத்து பேசிய அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், "மக்களின் பிரச்சினைகளைக் கேட்கத் தான் நான் இப்போது இங்கு வந்துள்ளேன். இன்று, ஜெரான் கிராமத்தில் பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தைச் செயல்படுத்துவதில் ஊழல் நடந்துள்ளதாகச் சிலர் கூறினர். நீங்களும் அவர்கள் யார் எனக் குறிப்பிட்டீர்கள். சம்பந்தப்பட்ட சிஎம்ஓ அதிகாரி உமா சங்கர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். அதேபோல மற்றொரு அதிகாரியான அபிஷேக் ராஜ்புட்டும் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்.

கைது
இருவரையும் சஸ்பெண்ட் மட்டும் செய்யவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செய்துள்ள முறைகேடுகள் தொடர்பாக மத்திய பொருளாதார குற்றப்பிரிவு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். அவர்கள் ஊழல் செய்தது உறுதியானால், சஸ்பெண்ட் மட்டுமல்ல. அவர்கள் ஜெயிலுக்கும் போய் கம்பி எண்ண வேண்டும். நாங்கள் ஏழை மக்களுக்குப் பணம் அளிக்கிறோம். ஆனால், இதை இதுபோன்ற அதிகாரிகள் அபகரிக்கின்றனர். இவர்கள் மீது விசாரணை நடத்தி இரண்டு நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய கமிஷ்னருக்கும் உத்தரவிடுகிறேன்" என்று அவர் தெரிவித்தார்.
|
வைரல் வீடியோ
ஊழல் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்வதாக மபி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மேடையில் அறிவித்த உடனேயே கூட்டத்தில் இருந்த பலத்த கரகோஷம் எழுப்பினர். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. ஊழல் அதிகாரிகளை மேடையில் வைத்தே சஸ்பெண்ட் செய்த முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை பலரும் பாராட்டி வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications