Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவுக்கு தேர்தல் ஃபீவர்.. பெண்களை கவர மபி அரசின் புதிய திட்டம்! அரசு பணியில் 35% இடஒதுக்கீடு

Subscribe to Oneindia Tamil

போபால்: விரைவில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் மத்திய பிரதேசத்தில் அரசு பணிகளில் பெண்களுக்கு 35% இடஒதுக்கீடு வழங்கும் அறிவிப்பை அம்மாநில அரசு வெளியிட்டு உள்ளது.

மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுஹான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அரசின் பதவி காலம் சில மாதங்களில் முடிவடைய இருக்கிறது. இந்த நிலையில் 1997-ம் ஆண்டு மத்தியப் பிரதேச அரசுப் பணியாளர் சட்டத்தில் இருக்கும் மகளிர் நியமனத்திற்கான சிறப்பு விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு மகளிருக்கு வனத்துறை தவிர்த்து அனைத்து அரசுத் துறைகளிலும் 35% இடஒதுக்கீடு வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்து உள்ளது.

Madhya Pradesh govt has announced a 35% reservation for women in government jobs

அரசு அறிவித்து இருக்கும் இந்த புதிய விதியின் அடிப்படையில், "அரசு துறைகளில் உள்ள அனைத்து பதவிகளிலும் 35% பெண்களுக்கு ஒதுக்கப்படும். வனத்துறை தவிர்த்து அனைத்து அரசுத் துறைகளிலும் இந்த இடஒதுக்கீடு பின்பற்றப்படும். நேரடி பணிகளை வழங்கும்போது இந்த இடஒதுக்கீடு கிடைமட்டமாகவும், பிரிவு வாரியாகவும் பின்பற்றப்படும்." என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக, மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், காவல் துறை மற்றும் பிற அரசு வேலைகளில் பெண்களுக்கு 35% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவித்தார்.

கல்வி பணிகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்படும் எனவும், உள்ளாட்சி அமைப்புகளில், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற பதவிகளில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார். பெண்களின் கல்விக் கட்டணத்தை அரசாங்கமே ஏற்பதுடன் அவர்களுக்கு சிறந்த கல்வியை உறுதி செய்யும் என்று அவர் கூறி இருந்தார். அதன் தொடர்ச்சியாகவே, மத்தியப் பிரதேச அரசு பணிகளில் பெண்களுக்கு 35% இடஒதுக்கீடு வழங்கும் சட்டமன்றத் தீர்மானம் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டமன்றத் தீர்மானத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்ததை அடுத்து, அது சட்டமாகி உள்ளது. மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மாநிலங்களவையில் கடந்த மாதம் நடந்த ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நிறைவேற்றப்பட்ட முதல் மசோதா அதுவாகும்.

கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி, இந்த மசோதாவுக்கான மக்களவையில் வாக்கெடுப்புக்கு வந்தது. இந்த மசோதாவை ஆதரித்து 454 உறுப்பினர்களும், எதிர்த்து 2 உறுப்பினர்களும் வாக்களித்தனர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொண்டு வந்த திருத்தங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. செப்டம்பர் 21 ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளன்று மாநிலங்களவையில் 'நாரி சக்தி வந்தன் அதினியம்' எனப்படும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா 'ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது'.

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 230 சட்டசபை தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவித்து வரும் நிலையில், அங்கும் பெரும்பான்மையாக உள்ள மகளிரை கவரும் வகையில் இந்த புதிய சட்டத்தை அம்மாநில அரசு செயல்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+