போலிச் சான்றிதழ்களை சரிபார்க்காமல் பணி நியமனம்: அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: போலிச் சான்றிதழ்களைச் சரிபார்க்காமல் பணி நியமனம் வழங்கிய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, பணி நீக்கம் செய்யத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் மண்டலத்தில் ஓட்டுநராக பணியாற்றிய சீனிவாசன், போலி பள்ளி மாற்றுச் சான்றிதழ் சமர்ப்பித்ததால் 2003ஆம் ஆண்டு பணி நீக்கம் செய்து போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை வேலூர் தொழிலாளர் நல நீதிமன்றமும் உறுதி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், போலி சான்றிதழ் அளித்ததாக சொல்லப்படும் சிலர், சிறிய தண்டனைகளுடன் பணியில் தொடர அனுமதிக்கப்பட்டுள்ள போது, தன்னை மட்டும் பணி நீக்கம் செய்து பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகளைப் போக்குவரத்துக் கழகம் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், மனுதாரர் போலி சான்றிதழ் சமர்ப்பித்தது ஆதாரங்கள் மூலம் நிரூபணமாகி உள்ளதால், அவருக்கு மீண்டும் பணி நியமனம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கமுடியாது என்றும் அவரை பணி நீக்கம் செய்தது சரி என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அதே சமயம், போலி சான்றிதழ் அளித்தவர்களுக்குப் பணி நியமனம் வழங்கிய அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவர்களைப் பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்திற்கு உத்தரவிட்டார்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications