மதுரை- கன்னியாகுமரி இருவழிப் பாதைத் திட்டம்... தென்மாவட்ட மக்களின் நீண்டகால கனவு நிறைவேறுகிறது
மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட மக்களின் நீண்டகால கனவான மதுரை- கன்னியாகுமரி இருவழிப் பாதைத் திட்டத்திற்கு 'நிதி ஆயோக்' ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லி: மதுரை- கன்னியாகுமரி இருவழிப் பாதைத் திட்டத்திற்கு 'நிதி ஆயோக்' ஒப்புதல் அளித்து தென்மாவட்ட மக்களின் வயிற்றில் பால் வார்த்துள்ளது. இருவழிப்பாதை பயன்பாட்டிற்கு வந்தால் அதிக ரயில்கள் இயக்கப்படும் என்பதால் தென்மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தலைநகரான சென்னையிலிருந்து, மாநிலத்தின் கடைக் கோடி மாவட்டமான கன்னியாகுமரி வரை உள்ள ரயில்பாதை தமிழகத்தின் மிகமுக்கிய ரயில் வழித்தடமாகும்.
இந்த வழித்தடமானது சென்னை, காஞ்சிபுரம் , விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் வழியாக கன்னியாகுமரியை வந்து அடைகிறது.
இதுதான் தமிழகத்தின் பிரதான ரயில்பாதை எனவும் குறிப்பிடலாம். ஏனென்றால் இந்தபாதையை மையமாக வைத்தே தென் மாவட்டங்களுக்கு செல்லும் பாதைகள் பிரிந்து செல்கின்றன.

நீண்டகால கோரிக்கை
தென்மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இந்தவழித் தடத்தில் அதிக ரயில்கள் இயக்க வேண்டும் என்று நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த வழித் தடம் ஒரு வழி பாதையாக இருப்பதால், மேலும் புதிய ரயில்கள் இயக்க முடியாத நிலை இருந்து வருகிறது.

கோரிக்கை ஏற்பு
தென்மாவட்ட பயணிகளின் கோரிக்கையை ஏற்று ரயில்வே நிர்வாகம் தென் தமிழக பகுதிகளான கன்னியாகுமரி - மதுரை (246 கி.மீ) வழித்தடங்களை இரு வழிப்பாதைகளாக மாற்றுவதற்கு கடந்த 2012-13ம் ஆண்டு அனுமதியளித்தது. அதை தொடர்ந்து தெற்கு ரயில்வே நிர்வாகம் கன்னியாகுமரி - மதுரை இருவழிபாதை அமைக்க தொடக்கநிலை பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வு அறிக்கை
246கி.மீ தூரம் கொண்ட இத்திட்டம் செயல்படுத்த சுமார் ரூ 1926 கோடிகள் தேவை என்று இந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் இந்த திட்டம் செயல்படுத்தினால் இதன் மூலமாக அரசுக்கு ரேட் ஆப் ரிட்டன் வருவாய் 8.095 சதவீதம் கிடைக்கும் என்று ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிதி ஆயோக் ஒப்புதல்
ரயில்வே அட்டவணையில், தமிழகத்தின் மிக முக்கிய திட்டமான மதுரை-மணியாச்சி-தூத்துக்குடி, மணியாச்சி-திருநெல்வேலி-நாகர்கோவில், கன்னியாகுமரி-திருவனந்தபுரம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பட்ஜட்டில் அறிவிக்கப்பட்டு இரண்டு வருடங்கள் முடிந்த பிறகு தற்போது நிதி ஆயோக்கின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூன்றுகட்டமாக அமல்
மதுரை -- மணியாச்சி -- தூத்துக்குடி 159 கி.மீ தூரம் ரூ.1,003.94 கோடியில்ஒரு திட்டமாகவும், மணியாச்சி -- திருநெல்வேலி -- நாகர்கோவில் 102 கி.மீ தூரம் ஒரு திட்டமாகவும், கன்னியாகுமரி -- திருவனந்தபுரம் 87 கி.மீ தூரம் ஒரு திட்டம் என மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கபட்டுள்ளது.

பயண நேரம் குறையும்
கன்னியாகுமரியிலிருந்து மதுரை வழியாகச் சென்னைக்கு இருவழிபாதை பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றுவிட்டால், தற்போது இந்த தடம் வழியாக இயக்கப்பட்டுவரும் அனைத்து ரயில்களுக்கும் பயணநேரம் கணிசமான அளவு குறையும்.

வடஇந்தியாவுக்கு அதிக ரயில்கள்
கன்னியாகுமரியிலிருந்து சென்னை வழியாக வடஇந்திய நகரங்களுக்கு புதிய ரயில்கள் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.தென்மாவட்டங்களிலும் ராஜதானி, சதாப்தி, ஜனசதாப்தி, டபுள்டக்கர், கரீப்ரதம் போன்ற ரயில்கள் அறிவிக்கப்படலாம். தற்போது இருவழிபாதையாக மாற்ற அறிவிக்கப்பட்டுள்ள மதுரை - நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி - திருவனந்தபுரம் ஆகிய இரண்டு திட்டங்களில் முதலில் நாகர்கோவிலிருந்து மதுரை மார்க்கம் பணிகளை முதலில் தொடங்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications