144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு.. குவிந்த பக்தர்கள்
லக்னோ: 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா கும்பமேளா நிகழ்ச்சி இன்றுடன் நிறைவடைகிறது. நிறைவு விழாவையொட்டி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி மாதம் 13 ஆம் தேதி சாதுக்கள், துறவிகளின் பக்தி கோஷத்துடன் மகா கும்பமேளா நிகழ்ச்சி தொடங்கியது. கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் இடமான திரிவேணி சங்கமம் அமைந்துள்ள பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த மகா கும்பமேளா நிகழ்வு நடைபெறுவதால் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பிரக்யாரஜ்ஜுக்கு குவிந்தனர். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா நிகழ்ச்சி நடந்து வருகிறது. பக்தர்களின் வசதிக்காக தற்காலிக குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திரிவேணி சங்கமத்தில் நாள்தோறும் பல லட்சம் பக்தர்கள் புனித நீராடி வருகிறார்கள். குறிப்பாக மகரசங்கராந்தி, மவுனி அமாவாசை, வசந்த பஞ்சமி, பவுஷ்ய பூர்ணிமா மற்றும் மகா சிவராத்திரி ஆகிய 5 தினங்கள் அமிர்த ஸ்நானத்துக்கு ஏற்ற தினங்களாக கூறப்படுகிறது. இந்த நாட்களில் புனித நீராட பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக மவுனி அமாவாசை தினமான கடந்த ஜனவரி 29 ஆம் தேதி திரிவேணி சங்கமத்தில் ஒரே நாளில் அதிக பட்சமாக 8 கோடி பக்தர்கள் புனித நீராடினர்.
அன்றைய தினம் ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர். 5 முக்கிய புனித தினங்களில் 4 தினங்கள் முடிந்து விட்டன. கடைசியாக மகா சிவராத்திரி தினம்தான் உள்ளது. அன்றைய தினம்தான் மகா கும்பமேளாவின் நிறைவு நாளாகும். அந்த வகையில் கடந்த 44 நாட்களாக நடந்து வந்த மகா கும்பமேளா, 45-வது நாளான மகா சிவராத்திரி தினமான இன்றுடன் (புதன்கிழமை) நிறைவு பெறுகிறது.
மகா கும்பமேளாவின் இறுதி நாளான இன்று, நிறைவு நாள் நிகழ்ச்சி மிகப் பிரமாண்டமாக நடைபெறுகிறது. கங்கைக்கரையில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெறுகிறது. மகா சிவராத்திரி மற்றும் மகா கும்பமேளா நிறைவுநாளான இன்று ஏராளமான பக்தர்கள் பிரயாக்ராஜ்ஜுக்கு வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. நேற்றே அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 63.36 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications