Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.2,000,000,000,000! மகா கும்பமேளாவால் உத்தர பிரதேசத்திற்கு கிடைக்க போகும் வருவாய்! எவ்வளவு பாருங்க

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேசத்தில் 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மகா கும்பமேளா நிகழ்ச்சியில் சுமார் 40 கோடி பேர் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யாவின் மக்கள் தொகையை விட இது அதிகம். கும்பமேளாவிற்கு வருபவர்கள் ஒவ்வொருவரும் சராசரியாக ரூ.5 ஆயிரம் செலவிட்டால் கூட பல லட்சம் கோடி உத்தர பிரதேசத்தில் பிசினஸ் நடக்க உள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா இன்று கோலாகலமாக தொடங்கியது. இன்று தொடங்கிய இந்த மகா கும்பமேளா அடுத்த மாதம் 26-ந்தேதி வரை 45 நாட்களுக்கு நடைபெறுகிறது. மகா கும்பமேளாவில் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருந்து 45 கோடி பக்தர்கள், துறவிகள், அகோரிகள் உள்ளிட்டோர் புனித நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

mahakumbh mela 2025 2025 spirtuality uttar pradesh

மகா கும்பமேளா

மகா கும்பமேளாவையொட்டி ஏராளமான பக்தர்கள் பிரயாக்ராஜில் குவிந்துள்ளனர். உலகம் முழுவதும் இருந்து சாதுக்கள், துறவிகள், பக்தர்கள், பொதுமக்கள் பிரயாக்ராஜில் திரண்டுள்ளதால் பிரயாக்ராஜ் நகர் பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. பக்தர்கள் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தின் கரையில் இன்று அதிகாலை 3.20 மணிக்கு புனித நீராடினார்கள். தொடர்ந்து பக்தர்கள் ஏராளமானோர் குவிந்து புனித நீராடி வருகிறார்கள்.

வெளிநாட்டியில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்துள்ளனர். முதல் நாளில் மட்டும் 50 லட்சம் பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். மகா கும்பமேளா விழாவுக்காக உத்தர பிரதேச அரசு ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மகா கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக 9,888 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடம் 25 மண்டலமாக பிரிக்கப்பட்டு தற்காலிகமாக மகா கும்பநகரம் அமைக்கப்பட்டு உள்ளது. மகா கும்பமேளாவுக்கு வரும் பக்தர்கள், ஒரே நேரத்தில் 50 லட்சம் முதல் 1 கோடி பேர் வரை தங்கும் வகையில் 1.6 லட்சம் கூடாரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

12 கிமீ தூரம் படித்துறை

முக்கிய பிரமுகர்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக சொகுசு கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 1.5 லட்சம் கழிப்பறைகள், 25 ஆயிரம் பேருக்கு படுக்கை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. திரிவேணி சங்கமத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு பக்தர்கள் செல்வதற்கு வசதியாக நதிகளின் குறுக்கே 30 மிதக்கும் பாலங்களும், பிரயாக்ராஜ் நகரில் 450 கி.மீ. நீளத்துக்கு சாலை, தெருக்களும், அங்கு 67 ஆயிரம் தெரு விளக்குகளும் அமைக்கப்பட்டு உள்ளன.

படித்துறைகளின் நீளம் 12 கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் நிறுத்துவதற்காக 4,570 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மகா கும்பமேளாவை காண வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் வருகை தந்து உள்ளனர். பாதுகாப்பு பணிகளுக்காக 45 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 நதிகள் இணையும் திரிவேணி சங்கமத்தில் மக்கள் சென்று வர 30 தற்காலிக பாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

பிரமாண்ட நுழைவு வாயில்கள்

பவுர்ணமி, மகா சிவராத்திரி உள்ளிட்ட சிறப்பு நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது. இந்த நாட்களில் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரயாக்ராஜில் உள்ள மகா கும்பநகரம் முழுவதும் பிரத்தியேகமான கருப்பொருளில் அமைக்கப்பட்டுள்ள நுழைவு வாயில்கள் பக்தர்களுக்கு அடையாளமாக இருந்து அவர்கள் குறிப்பிட்ட இடங்களை கண்டறிந்து செல்ல உதவுகிறது.

பிரயாக்ராஜுக்கு வரும் பக்தர்களை வரவேற்கும் வகையில் நகரின் பல்வேறு இடங்களில் பிரமாண்ட நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. கட்டிடங்களின் சுவர்களில் அழகிய வரைபடங்கள் வரையப்பட்டுள்ளன. மகா கும்பநகரில் பல இடங்கள் கலசம், சங்கு போன்ற ஆன்மிக பொருட்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. தெருக்கள் அலங்கார மின்விளக்குகளால் ஜொலிக்கிறது.

நீருக்கு அடியில் 113 டிரோன்கள்

நீருக்கு அடியில் செயல்படும் 113 டிரோன்கள், 3 ஆயிரம் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் உள்பட நவீன தொழில்நுட்பங்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மாநில போலீசாருடன் தேசிய பாதுகாப்புப் படையினர், தீவிரவாத தடுப்பு படையினர் உள்ளிட்டோரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

40 கோடி பேர் வருவார்கள்

உலகில் மிகப்பெரிய அளவில் பக்தர்கள் கூடும் இடமாக கும்பமேளா நிகழ்ச்சி கருதப்படுகிறது. 40 கோடி பேர் வருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ரஷ்யா நாடுகளின் மொத்த மக்கள் தொகையை விட இது அதிகம் ஆகும். மகா கும்பமேளாவால் உத்தர பிரதேசத்திற்கு சுமார் 2 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிகழ்ச்சிக்கு வரும் ஒவ்வொருவரும் 5 ஆயிரம் ரூபாய் செலவு செய்தாலே இவ்வளவு தொகைக்கு உத்தர பிரதேசத்தில் பிசினஸ் நடக்கும். ஒவ்வொரு நபரும் செலவிடும் தொகை 10 ஆயிரமாக அதிகரிக்கும் என்றும் இதனால் பொருளாதாரத்தில் 4 லட்சம் கோடி அளவுக்கு தாக்கம் ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதம் உயரவும் இது வழிவகுக்கும் என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+