நம்பிக்கை வாக்கெடுப்பு சரி வருமா? இல்லை பதவி விலகலாமா? நாளை காலையே முடிவு செய்யும் பாஜக!

மகாராஷ்டிரா அரசியல் திருப்பங்கள் குறித்தும் நாளை நடக்க உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்தும் பாஜக மற்றும் கூட்டணி தலைவர்கள் ஆலோசனை நடத்த இருக்கிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மகாராஷ்டிராவில் முதல்வர் பட்னாவிஸ் திடீர் ராஜினாமா!| Devendra Fadnavis resigns as the Chief Minister

    மும்பை: மகாராஷ்டிரா அரசியல் திருப்பங்கள் குறித்தும் நாளை நடக்க உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்தும் பாஜக மற்றும் கூட்டணி தலைவர்கள் ஆலோசனை நடத்த இருக்கிறார்கள். நாளை காலை மும்பையில் இந்த ஆலோசனை நடக்க உள்ளது.

    மகாராஷ்டிராவில் தற்போது பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்று, பாஜக கட்சிக்கு ஆதரவு வழங்கி வருகிறார்.

    நாளை மகாராஷ்டிராவில் மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ளது.இதனால் நாளை பாஜக தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

    சட்டசபை தேர்தல்

    சட்டசபை தேர்தல்

    நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், ஆர்எச்எஸ்பி 1 இடத்திலும் வென்றது. . காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் 45 இடங்கள், தேசியவாத காங்கிரஸ் 53 இடங்கள், சமாஜ்வாதி இரண்டு இடங்கள் வென்றது.

    இடங்கள் தேவை

    இடங்கள் தேவை

    மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. ஆனால் சிவசேனா கூட்டணிக்கு 162 இடங்கள் இருக்கிறது. இதை நேற்றே சிவசேனா கூட்டணி அணிவகுப்பு நடத்தி நிரூபித்துவிட்டது. உங்களால் எங்களை பிரிக்கவே முடியாது என்று மூன்று கட்சிகளும் வெளிப்படையாக அறிவித்துவிட்டது.

    என்ன பலம்

    என்ன பலம்

    இதனால் தற்போது பாஜக தன்னுடைய பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதனால் நாளை காலை பாஜக முக்கியமான கூட்டம் ஒன்றை நடத்த உள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து பாஜக மற்றும் கூட்டணி தலைவர்கள் ஆலோசனை நடத்த இருக்கிறார்கள். நாளை காலை மும்பையில் இந்த ஆலோசனை நடக்க உள்ளது.

    பலம் என்ன

    பலம் என்ன

    இதில் பாஜகவின் உண்மையான பலம் என்னவென்று தெரிந்துவிடும் என்று கூறுகிறார்கள். இன்று இரவிற்குள் பாஜக எத்தனை எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்குமோ, அவர்கள் எல்லோரும் நாளை பாஜகவின் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள். அதாவது நாளை காலையே பாஜகவின் உண்மையான பலம் என்னவென்று தெரிந்துவிடும்.

    பதவி விலகல்

    பதவி விலகல்

    இதில் முக்கியமான இரண்டு விஷயங்கள் குறித்து ஆலோசிக்க இருக்கிறார்கள். அதன்படி நாளை நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொண்டு பெரும்பான்மையை நிரூபிக்கலாமா? அல்லது அதற்கு முன்பாகவே பதவி விலகி விடலாமா என்று முடிவு செய்ய இருக்கிறார்கள். கர்நாடகாவில் எடியூரப்பா பதவி விலகியது போல செய்து விடலாமா என்று ஆலோசிக்க உள்ளனர். இதனால் அந்த ஆலோசனை கூட்டம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+