For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திரும்பி வாங்க அஜித்.. கட்சிக்கும் குடும்பத்துக்கும் அதான் நல்லது.. மகாராஷ்டிராவில் பாச போராட்டம்

மகாராஷ்டிராவில் பாஜகவுடன் கூட்டணி வைத்து இருக்கும் அஜித் பவார் மீண்டும் திரும்பி வர வேண்டும் என்று சரத் பவாரின் குடும்பத்தினர் தீவிரமாக முயன்று வருகிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. அஜீத் பவார் பிரிந்து வர இதுதான் காரணமா?

    மும்பை: மகாராஷ்டிராவில் பாஜகவுடன் கூட்டணி வைத்து இருக்கும் அஜித் பவார் மீண்டும் திரும்பி வர வேண்டும் என்று சரத் பவாரின் குடும்பத்தினர் தீவிரமாக முயன்று வருகிறார்கள்.

    மகாராஷ்டிரா அரசியல் திருப்பங்கள் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பாஜகவுடன் கூட்டணி வைத்தார். திடீர் என்று அவர் தன்னுடன் சில எம்எல்ஏக்களை அழைத்துக் கொண்டு பாஜகவுடன் கூட்டணி வைத்தார்.

    சனிக்கிழமை அதிகாலை இந்த அதிரடி திருப்பம் நடந்தது. இதுதான் தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பாஜகவிற்கு பெரும்பான்மையை நிரூபிக்க நவம்பர் 30 வரை நேரம் கொடுக்கப்பட்டுள்ளது.

    மீண்டும் முதல்வர்

    மீண்டும் முதல்வர்

    அங்கு இதனால் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக பதவி ஏற்று இருக்கிறார். அஜித் பவார் துணை முதல்வராக பதவி ஏற்றுவிட்டாலும் கூட இன்னும் துணை முதல்வராக அவர் பணிகளை தொடங்கவில்லை. அவருக்கும் பாஜகவிற்கும் இன்னும் அவ்வளவு இணக்கமான போக்கு உருவாகவில்லை. அவரால் பாஜக தலைவர்களுடன் அவ்வளவு நட்பாக இன்னும் பழக முடியவில்லை என்கிறார்கள்.

    இப்போது அல்ல.. 2 மாதத்திற்கு முன்பே 'பிளான் பி' போட்ட அமித் ஷா.. அஜித்தை சிக்க வைத்தது இப்படித்தான்இப்போது அல்ல.. 2 மாதத்திற்கு முன்பே 'பிளான் பி' போட்ட அமித் ஷா.. அஜித்தை சிக்க வைத்தது இப்படித்தான்

    இன்னொரு பக்கம்

    இன்னொரு பக்கம்

    அதே போல் இன்னொரு பக்கம் தேசியவாத காங்கிரஸ் கட்சி அஜித் பவாரை மீண்டும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறது என்றும் கூறுகிறார்கள். அவர் பாஜகவுடன் கூட்டணி வைத்தது தவறுதான். ஆனால் அவர் எங்கள் குடும்ப உறுப்பினர். அவரை அப்படியே விட்டுவிட முடியாது.

    பாச போராட்டம்

    பாச போராட்டம்

    அவர் மீண்டும் எங்களுடன் இணைந்தால் நாங்கள் சேர்த்துக் கொள்வோம். அனைத்தையும் மறந்து சேர்த்துக் கொள்வதுதான் நல்லது என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். இதனால் அங்கு பெரிய பாச போராட்டமே நடந்து வருகிறது. இதற்காக சரத் பவாரின் நெருங்கிய உறவினர்கள் சிலர் அஜித் பவாரிடம் போன் செய்து பேசி இருக்கிறார்கள்.

     உறவினர்கள் பேசினார்கள்

    உறவினர்கள் பேசினார்கள்

    அஜித் பவாரின் தாய் மாமன்கள் சிலரும் அவரிடம் போனில் பேசி உள்ளனர். திரும்பி வந்துவிடுங்கள், கட்சிக்கும் குடும்பத்திற்கும் அதுதான் நல்லது என்று அவருக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார்கள். நேற்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினர் திலீப் வால்சே பாட்டீல் அஜித் பவாரை சந்தித்துள்ளார். அவரின் வீட்டிலேயே சென்று சந்தித்து இருக்கிறார்.

    ஆனால் இல்லை

    ஆனால் இல்லை

    இதுவும் கூட சமாதான தூதுதான் என்கிறார்கள். ஆனால் அஜித் பவார் இதை எல்லாம் கேட்பதாக தெரியவில்லை என்கிறார்கள். அவருக்கு வேறு எதோ பெரிய பிரச்சனை இருக்கிறது. அவரால் அதிலிருந்து வெளியே வர முடியவில்லை.

    சரியாகும்

    சரியாகும்

    அவர் எங்கோ நன்றாக மாட்டி இருக்கிறார். அதனால்தான் மனதை மாற்றிக்கொள்ளாமல் இருக்கிறார். நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு பின்புதான் இந்த பிரச்சனை சரியாகும் என்று கூறுகிறார்கள்.

    English summary
    Maharashtra: Sharad Pawar family is still trying to get Ajit Pawar back to the party with the help of well-wishers.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X