நீதான்மா பொண்டாட்டி.. விட்டுக்குள் புதைந்த விஜய்! கோமலை காட்டிக் கொடுத்த டைல்ஸ்! ’பாபநாசம்’ கிரைம்
மும்பை: கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ததோடு உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டுக்குள் புதைத்த மனைவியையும் அவரது கள்ளக்காதலனையும் போலீசார் கைது செய்திருக்கின்றனர். அண்ணனை காணவில்லை என தம்பி தேடி வந்த போது, வீட்டின் டைல்ஸ் வித்தியாசமாக இருந்த நிலையில் கொலை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலம் வால்கர் மாவட்டத்தை சேர்ந்த விஜய் சவான் என்பவருக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு கோமல் சவான் என்பவருடன் திருமணம் நடந்தது. எட்டு வயதில் இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறான்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக விஜய் சவானை காணவில்லை என சொல்லப்படுகிறது. இதை அடுத்து அவரது சகோதரர் விஜயை தொடர்பு கொள்ள முயன்றிருக்கிறார். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதை அடுத்து கோமலிடம் சென்று தனது அண்ணன் எங்கே என கேட்டுள்ளார். அவர் வெளியூர் சென்றிருப்பதாக சொல்லி இருக்கிறார்.

ஆனால் எப்போது வெளியூர் போனாலும் தன் அண்ணன் தன்னிடம் சொல்லிவிட்டு தான் செல்வார் என நினைத்த சகோதரர் அங்கிருந்து சென்றிருக்கிறார். தொடர்ந்து பதினைந்து நாட்கள் ஆகியும் விஜய் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதை அடுத்து நேராக விஜய்யின் வீட்டுக்கே அவரது தம்பி சென்றிருக்கிறார். அப்போது வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில், கோமல் தலைமறைவாகி இருந்தார். ஏதோ நடந்திருக்கிறது என அச்சமடைந்த அவர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ் கற்கள் வித்தியாசமாக இருந்தது.
அதனை தட்டிப் பார்த்தபோது உள்ளே ஏதோ ஒன்று இருப்பது தெரிய வந்தது. இதை அடுத்து டைல்ஸ் கற்களை உடைத்து பார்த்தபோது கடும் துர்நாற்றம் வீசியது. இதை அடுத்து சந்தேகம் அடைந்த அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தொடர்ந்து அங்கு வந்த போலீசார் பள்ளம் தோண்டி பார்த்த பிறகு அதில் துண்டு துண்டாக உடல் வெட்டப்பட்டு விஜயின் சடலம் இருப்பது தெரிய வந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் கோமல் தான் விஜயை கொலை செய்து உடலை புதைத்தது தெரிய வந்தது.
தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் கோமலை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் தான் அந்த அதிர்ச்சி தரும் தகவல் தெரிய வந்தது. கோமலுக்கும் அருகே வசித்து வந்த மோணு என்பவருக்கும் முறையற்ற உறவு ஏற்பட்டுள்ளது. விஜய் வேலைக்கு சென்ற பிறகு கோமல் வீட்டுக்கு வந்திருக்கிறார் மோணு. இந்த நிலையில் இருவரும் தனிமையில் இருப்பதை விஜய் பார்த்துள்ளார். இதை அடுத்து மனைவியை கண்டித்த நிலையில் தங்களது முறையற்ற உறவுக்கு தடையாக இருக்கும் விஜயை கொலை செய்ய முடிவு எடுத்துள்ளனர்.
தொடர்ந்து பாபநாசம் படத்தில் வருவது போல விஜயை கொலை செய்து உடலை வீட்டுக்குள்ளேயே குழி தோண்டி புதைத்திருக்கிறார்கள். அப்போது டைல்ஸ் கற்கள் உடைந்த நிலையில் புது டைல்ஸ் வாங்கி வந்து பதித்திருக்கின்றனர். தற்போது அதே டைல்ஸ் கற்கள் தான் இருவரையும் சிக்க வைத்திருக்கிறது. தொடர்ந்து கோமலையும், மோணுவையும் கைது செய்த போலீசார் இருவரையும் சிறையில் அடைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications