கற்பழிப்பு புகார் கொடுக்க வந்த பெண்ணை நாசம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்
புகார் கொடுக்க வந்த சப்-இன்பெக்டர் கற்பழித்துள்ளார்.
தானே: காமுகர்களால் ஏற்கனவே சிதைக்கப்பட்டு உதவி கோரி ஓடிவந்த இளம்பெண்ணை, போலீஸ்காரரே நாசமாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா பிவாண்டியை சேர்ந்தவர் ரோஹன் கொன்ஜாரி. இவர் சாந்திநகர் போலீஸ் ஸ்டேஷனில் சப் இன்ஸ்பெக்டராக உள்ளார்.
இந்நிலையில் ஒரு இளம் சமீபத்தில் அந்த ஸ்டேஷனுக்கு வந்தார். அங்கிருந்த ரோஹனிடம் "நான் சதீஷ் என்பரை காதலித்தேன். இதற்கு அவரது முன்னாள் காதலி எதிர்த்து தெரிவித்தார். நான் சதீஷ்கூட பழகுறது அவளுக்கு பிடிக்கல. அதனால் அவளுடைய நண்பன் சலீம் என்பவரை தூண்டிவிட்டாள்.

வீடியோவில் படம்
சலீம் என்னிடம் சமாதானம் பேசுவது போல வந்து, கூல்டிரிங்ஸ் கொடுத்தார். அதை குடித்ததும் நான் மயங்கி விட்டேன். அந்த நேரத்தில் என்னை பலாத்காரம் செய்துவிட்டார். என்னை கற்பழிக்கும்போது, அதை வீடியோவில் படம் பிடித்து கொண்டனர்.

கதறி அழுதார்
இதற்கு சதீஷூம் உடந்தை. அதை காட்டி காட்டி என்னிடம் பணம் பறித்தனர். இதுவரை 43 ஆயிரம் பிடுங்கி விட்டனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கதறி அழுதார். இது சம்பந்தமாக புகாரும் எழுதி கொடுத்தார்.

பொய் கேஸ் போட்டுடுவேன்
வழக்கை விசாரிக்க ஆரம்பித்தார் ரோஹன். ஆரம்பிக்க மட்டும்தான் செய்தார்.. எதையுமே முழுசா விசாரிக்க தொடங்கவில்லை. புகார் கொடுக்க வந்த பெண்ணிடமே வேலையை காட்ட ஆரம்பித்தார். "நான் சொல்றபடி நீ நடந்துக்கலேன்னா, உன் மேல பொய் கேஸ் போட்டு உள்ளே தள்ளிடுவேன்" என்று சொல்லி சொல்லியே அந்த பெண்ணை பலாத்காரம் செய்தார்.

தலைமறைவு
இதனால் நிலைகுலைந்த அந்த பெண், மிரட்டி பலாத்காரம் செய்த ரோஹனுக்கு எதிராக கொன்காவ் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். இரு தரப்பிலும் தன்னை பலாத்காரம் செய்த விவரத்தையும் தெரிவித்தார். தன் மீது புகார் கொடுத்துள்ள விஷயம் தெரிந்து போய் ரோஹன் தலைமறைவாகி உள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications