டாக்டர் அம்பேத்கரின் லண்டன் வீடு விற்பனைக்கு – ஏலத்தில் எடுக்க மகாராஷ்டிரா அரசு ஆர்வம்!
மும்பை: இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் காரணகர்த்தாவான டாக்டர் அம்பேத்கர் லண்டனில் வசித்த வீடு விற்பனைக்கு வந்துள்ளது.
அதனை ஏலத்தில் எடுக்க மகராஷ்டிர அரசிற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து அவ்வீட்டினை ஏலத்தில் எடுப்பதற்கான நடவடிக்கைகளை உறுதிப்படுத்த வேண்டும் என்று மகாராஷ்டிர அரசை, அந்த மாநில நீர்ப் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிதின் ராவத் கேட்டுக் கொண்டுள்ளார்.

லண்டனில் பொருளாதாரம்:
லண்டனில் உள்ள பொருளாதாரப் பள்ளியில் அம்பேத்கர் பயின்றபோது, அங்கு ஹென்றி சாலையில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தார். அந்த வீடு தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க வீடு:
அம்பேத்கர் வாழ்ந்த அந்த வீடு வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும். சுமார் 2,050 சதுர அடி பரப்பளவு கொண்ட அந்த வீட்டின் மதிப்பு ரூபாய் 40 கோடியாக இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

எழுத்து பூர்வ அனுமதி:
அந்த வீட்டை வாங்குவதற்கு மாநில சமூக நீதி அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக அனுமதி அளித்துள்ளது. முதல்வர் பிருத்விராஜ் சவுகானும் இந்த நோக்கத்துக்கு ஆதரவாக உள்ளார்.
பிரிட்டன் ஆதரவாளர்கள் கடிதம்:
இந்த ஏலத்தை தெரியப்படுத்தும் விதமாக பிரிட்டனில் உள்ள அம்பேத்கர் ஆதரவாளர்களின் கூட்டமைப்பு மத்திய, மகாராஷ்டிர அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications