வேலைக்கார பெண் ஒரு சிஐஏ ஏஜெண்ட்: தேவ்யானியின் தந்தை உத்தம் கோப்ராகடே அதிரடி புகார்
Subscribe to Oneindia Tamil

மும்பையில் இந்திய குடியரசுக் கட்சியின் தலைவர் ராம்தாஸ் அத்வாலேயுடன் செய்தியாளர்களிடம் பேசிய உத்தம் கோப்ராகடே, கடந்த ஒரு ஆண்டுகாலமாக நடைபெற்று வரும் இந்த பிரச்சனைகளை ஆராயும் போது மிகப் பெரிய சதி இருப்பதை உணர முடிகிறது.
சந்தர்ப்ப சூழ்நிலைகளை வைத்துப் பார்த்தால் வேலைக்காரப் பெண் சங்கீகா, சிஐஏ உளவாளியாகத்தான் இருந்திருப்பார் போல.. இந்த வழக்கில் நாங்கள் பலிகடாக்களாக்கப்பட்டுவிட்டோம். தேவ்யானி மிகவும் துணிச்சலான பெண். தமது கடமையில் சிறப்பாக செயல்படக் கூடியவள் என்றார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ராம்தாஸ் அத்வாலே, வேலைக்கார பெண் சிஐஏ ஏஜெண்ட் என்ற அடிப்படையில் மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும். தேவ்யானி மீதான வழக்கு கைவிடப்படும் வரை எமது கட்சித் தொண்டர்களின் போராட்டம் தொடரும் என்றார்.












Click it and Unblock the Notifications