பெங்களூரின் பிரபல ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து.. 2 மணி நேரம் போராடி தீ அணைப்பு
பெங்களூர்: பெங்களூர், ராஜராஜேஸ்வரி நகரிலுள்ள பிரபல ஷாப்பிங் மாலில் இன்று காலை ஏற்பட்ட பயங்க தீவிபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தக்க நேரத்தில் வாடிக்கையார்கள் வெளியேறியதால் உயிர் சேதம் ஏற்படவில்லை.
பெங்களூரின், மைசூர் ரோடு பகுதியில், ராஜராஜேஸ்வரி நகர் ஆர்ச் பகுதியிலுள்ளது கோபாலன் மால். இதன் முதலாவது மாடியில் மெக் டொனால்டு உணவகம் உள்ளது. இங்கிருந்து காலை 11 மணியளவில் பெரும் புகை கிளம்பி வெளியே வந்துள்ளது. இதன்பிறகுதான் அங்கு தீவிபத்து ஏற்பட்டிப்பதை பிற ஷாப் ஊழியர்கள் கவனித்து ஓட்டம் பிடித்தனர்.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள், பிராண்ட் பேக்டரி உள்ளிட்ட பல டெக்ஸ்டைல் கடைகளுக்கும் தீ பரவியிருந்தது. கடைகள் பல சேதமடைந்திருந்தாலும், தக்க நேரத்தில் தீ விபத்து குறித்து தெரியவந்ததால் வாடிக்கையாளர்களும், பிற ஊழியர்களும் காயமின்றி தப்பினர்.

ஞாயிற்றுக்கிழமை விபத்து நடந்திருந்தால் வாடிக்கையாளர்கள் கூட்டம் காரணமாக, பெரிய அளவில் சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருந்ததாக போலீசார் தெரிவிக்கிறார்கள். இந்த சம்பவத்தால், பல மணி நேரத்திற்கு, மைசூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
-
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications