நூற்றுக்கணக்கான உயிர் பலி.. இந்தியாவை உலுக்கிய பயங்கர ரயில் விபத்துக்கள்.. முழு விவரம் இதோ!

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளாகியுள்ளது. நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை இந்த ரயில் விபத்து ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்தியாவில் நடந்த சில மேஜர் ரயில் விபத்துக்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

மேற்கு வங்காளத்தில் உள்ள ஷாலிமார் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 3.20 மணிக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கம் போலக் கிளம்பியது. 12841 என்ற எண் கொண்ட இந்த ரயில் மறுநாள் மாலை ஒடிசா, ஆந்திரா வழியாகச் சென்னை வந்தடையும்.

 Major Train Accidents in India: Heres the Details

கொல்கத்தாவில் இருந்து கிளம்பிய இந்த ரயில், இரவு 7.20 மணியளவில் பாலசோர் மாவட்டத்தில் வரும் போது விபத்தில் சிக்கியுள்ளது. பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வந்த போது கோரமண்டல் ரயில் தடம் புரண்டுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 50 பேர் உயிரிழந்து இருந்து இருக்காலம் என அஞ்சப்படுகிறது.

2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். நாடு முழுவதும் அதிர்ச்சியை இந்த ரயில் விபத்து ஏற்படுத்தியுள்ள சூழலில், இந்தியாவில் நடந்த சில பெரிய ரயில் விபத்துக்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

* 1993: உத்தர பிரதேசத்தின் கான்பூர் அருகே ஹவ்ரா - நியூடெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 120 பயணிகள் உயிரிழந்தனர்.
* 1995: பரிசோதாபாத்தில் பயங்கர ரயில் விபத்து நடைபெற்றது. கலிண்டி எக்ஸ்பிரஸ் ரயிலும் புருசோத்தம் எக்ஸ்பிரஸ் ரயிலும் உத்தரபிரதேசத்தின் பரிசோதாபாத் அருகே பயங்கரமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 358 பேர் பலியாகினர்.

* 1999: அசாம் மாநிலத்தில் உள்ள கைசால் பதியில் அவாத் - அசாம் எக்ஸ்பிரஸ் ரயிலும் பிரம்ம புத்ரா மெயில் ரயிலும் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 290 பேர் பலியாகினர்.
* 1998: பஞ்சாப் மாநிலத்தில் Frontier மெயில் ரயிலும் லோக்கல் பேசஞ்சர் ரயிலும் கன்னா நகரம் அருகே மோதிக்கொண்டன. பஞ்சாப் மாநிலத்தை உலுக்கிய இந்த விபத்தில் சுமார் 212 பேர் பலியாகினர்.

 Major Train Accidents in India: Heres the Details

கியானேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து: * 2002: பீகார் மாநிலத்தில் ரஃபிகாஞ்ச் பகுதியில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரயில் பயணிகள் 130 பேர் பலியாகினர்.
* 2010: மேற்குவங்காளத்தில் ஜர்க்ராம் பகுதியில் நாச வேலை காரணமாக கியானேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. இந்த சம்பவத்தில் 148 அப்பாவி பயணிகள் உயிரிழந்தனர்.

* 2009: மேற்குவங்காளத்தின் கியானேஷ்வரி அருகே புவனேஷ்வர் - நியூ டெல்லி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 140 பேர் பலியாகினர்.
* 2009: மேற்குவங்காள மாநிலம் ரகுநாதபுரம் அருகே புரி - ஹவ்ரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுமார் 100 பேர் பலியாகினர்.

* 2017: மகராஷ்டிர மாநிலம் எல்பின்ஸ்டோன் ரயில்வே நிலைய நடைமேம்பாலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 23 பயணிகள் உயிரிழந்தனர்.
* 2021: மகராஷ்டிர மாநிலம் வைபப்வாடி ரோடு ரயில் நிலையத்தில் வைபவ்வாடி ரோடு- மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. இந்த விபத்தில் சுமார் 22 பேர் பலியாகினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+