கோவில் கட்டுவதற்கு முன்பு டாய்லெட்டுகளைக் கட்டுங்கள்.. மாணவர்களுக்கு மோடி அழைப்பு
டெல்லி: இந்துத்வாவாதி என்பது எனது அடையாளமாக இருக்கலாம். ஆனால் என்னைக் கேட்டால் கோவில் கட்டுவதற்கு முன்பு நாம் கழிப்பறைகளைக் கட்ட வேண்டும் என்றுதான் சொல்வேன் என்று கூறியுள்ளார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.
டெல்லியில் நடந்த கல்லூர மாணவர்களுடனான சந்திப்பின்போதுதான் இந்த அழைப்பை வெளியிட்டார் அவர்.
கிட்டத்தட்ட 700 மாணவர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பின்போது மதச்சார்பின்மை என்றால் என்ன என்பதற்கும் விளக்கம் அளித்தார் மோடி.
மோடியின் பேச்சிலிருந்து....

மதச்சார்பின்மை என்றால் என்ன...
மதச்சார்பின்மை என்றால் நாடே பிரதானம், இந்தியாவே பிரதானம் என்பதுதான் எனது கருத்து. அதுதான் உண்மையான மதச்சார்பின்மை. அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும். யாருக்கும் சார்பாக நடக்கக் கூடாது. வாக்கு வங்கி அரசியல் கூடாது. இதுதான் உண்மையான மதச்சார்பின்மை.

டீ விற்றவன் நான்
எனது குடும்பத்தில் யாருக்குமே அரசியல் என்றால் என்ன என்றே தெரியாது. நான் டீக் கடையில் டீ விற்றவன். ரயிலில் டீ விற்றுள்ளேன். இன்று உங்கள் முன்பு நின்று கொண்டிருக்கிறேன்.

உங்களால் முடியும்
எனவே உங்களது பின்னணி குறித்துக் கவலைப்படாதீர்கள். நாட்டை மாற்ற விரும்பினால் தொடர்ந்து நடங்கள், நிச்சயம் பாதை புலப்படும் என்றார் மோடி.

நாயுடுவும் பங்கேற்பு
இந்த சந்திப்பின்போது தெலுங்கு தேசம் தலைவரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவும் உடன் இருந்தார்.

காங்கிரஸுக்கு எதிராக நாயுடு முழக்கம்
கூட்டத்தில் நாயுடுவும் பேசினார். அப்போது காங்கிரஸைத் தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.
-
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
டிரம்ப் உடைத்த சர்ப்ரைஸ்.. "மோடி என் நண்பன்".. விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்











Click it and Unblock the Notifications