அழகு சாதனத்தில் ஆர்வம் காட்டும் இந்திய ஆண்கள்: ரூ 3,800 கோடிக்கு வர்த்தகம்
மும்பை: சில வருடங்களுக்கு முன்புவரை, மிஞ்சிப்போனால் ஷேவிங் லோஷன், மாய்ஸ்ட்ரைசர் என ஆண்களுக்கு குறிப்பிட்டு சொல்லும்படியாக சில அழகு சாதனப் பொருட்கள் மட்டுமே விற்பனை சந்தையில் இருந்தன.
பெண்களுக்கு மட்டும் தான் அழகுணர்ச்சி அதிகம் என்பது போல, இந்தியாவில் அதிக விற்பனை நிறுவனங்கள் பெண்களைக் குறிவைத்தே தங்களின் வணிகத்தை விரிவு படுத்தி வந்தார்கள்.
ஆனால், இன்றோ ஆண்களும் தங்களுடைய தோற்றத்தை மெருகேற்றிக் கொள்ள அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது அவர்களது அழகு சாதன வர்த்தகம் மூலம் தெரிய வந்துள்ளது.

பெருகி வரும் அழகுநிலையங்கள்...
ஆண்களுக்கென அதிகரித்துவரும் அழகுசாதனப் பொருட்களுக்கான விளம்பரங்களும், ஆண்கள் அழகு நிலையங்களும் ஆண்களுக்கும் தங்களை அழகு படுத்திக் கொள்ள ஆர்வம் காட்ட ஆரம்பித்திருப்பதை வெளிக்காட்டும் சாதனங்களாக உள்ளது.

ரூ 3,800 கோடி விற்பனை....
இதன் விளைவாக இந்திய சந்தையில் ஆண்களின் அழகு சாதனப் பொருட்கள் விற்பனை ரூ3,800 கோடியைத் தொடும் அளவிற்கு வளர்ந்துள்ளது.

புதிய விற்பனையாளர்கள்....
ஆண்கள் அழகு சாதனப் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள வரவேற்பைத் தொடர்ந்து, பல புதிய விற்பனையாளர்களும் சந்தையில் இறங்க ஆரம்பித்துள்ளனர்.

21 சதவீதம் அதிகரிப்பு....
உலக வர்த்தக சந்தை ஆய்வு நிறுவனமான யூரோமானிட்டரின் கணக்கீட்டின்படி, இந்தியாவில் ஆண்டு விற்பனை இந்தத் துறையில் 21 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

மூன்று ஆண்டுகளில்....
இதேநிலை நீடித்தால், இன்னும் மூன்று வருடங்களுக்குள் ஆண்கள் அழகு சாதன விற்பனை ரூ5,270 கோடியைத் தொடும் என்றும் கணக்கீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications