ராகுல் பற்றி கார்கே சொன்ன அந்த வார்த்தை.. ஷாக்கான தொண்டர்கள்! மேடையிலேயே மன்னிப்பு - பரபரப்பு
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி குறித்து மல்லிகார்ஜூன கார்கே கூறிய வார்த்தை அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் சுதாரித்து கொண்டு மேடையிலேயே மன்னிப்பு கோரினார். இந்த சம்பவம் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அசோக் கெலாட் உள்ளார். ராஜஸ்தான் சட்டசபையில் 5 ஆண்டு பதவிக்காலம் முடிவுக்கு வர உள்ளது. இதனால் இந்திய தேர்தல் ஆணையம் ராஜஸ்தானுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது.

அதன்படி வரும் 25ம் தேதி ராஜஸ்தானில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் பிற மாநிலங்களை போல் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
ராஜஸ்தானை பொறுத்தமட்டில் தற்போது அங்கு மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் ஒரு கட்சி வெற்றி பெற வேண்டும் என்றால் 101 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ராஜஸ்தானை பொறுத்தமட்டில் காங்கிரஸ்-பாஜக இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் தான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ், பாஜக தலைவர்கள் தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.
தேர்தல் தேதி நெருங்கி உள்ளதால் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக மாநிலத்தில் ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ் கட்சி முயற்சித்து வருகிறது. மேலிட தலைவர்களுடன் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் காங்கிரஸ் மாநில தலைவர் சச்சின் பைலட் ஆகியோர் பம்பரமாக சுழன்று தேர்தல் பணியை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் பாஜக தலைவர்களும் காங்கிரஸை வீழ்த்தி அரியணை ஏறும் வகையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் ராஜஸ்தான் மாநிலம் அனுப்கார்க் பகுதியல் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தியின் பெயரை வாய்த்தவறி தவறாக கூறி மல்லிகார்ஜுன கார்கே பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது மல்லிகார்ஜூன கார்கே மேடையில் பேசியபோது, ‛‛ராகுல் காந்தி போன்ற தலைவர்கள் தங்களின் உயிரை நாட்டுக்காக தியாகம் செய்துள்ளனர்'' என்றார். ராகுல் காந்தி எம்பியாக உயிரோடு இருக்கும் நிலையில் கார்கேவின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை புரிந்து கொண்ட மல்லிகார்ஜுன கார்கே, ‛‛மன்னிக்கவும். நான் தவறுதலாக ராகுல் காந்தியின் பெயரை கூறிவிட்டேன். ராஜிவ் காந்தி நாட்டின் ஒற்றுமைக்காக உயிர் தியாகம் செய்துள்ளார். நாட்டுக்காக உயிரை கொடுத்த தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் உள்ளனர்'' என திருத்தி கூறினார். அதோடு பாஜகவில் உயிரைப் பறிக்கும் தலைவர்கள் உள்ளனர்'' எனவும் சாடினார். இதற்கிடையே மல்லிகார்ஜுன கார்கே வாய்த்தவறி ராஜிவ் காந்தி என்பதற்கு பதில் ராகுல் காந்தியின் பெயரை கூறியதை வைத்து பாஜகவினர் கிண்டல் செய்து வருகின்றனர்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி? -
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
Durga Stalin: துர்கா என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசலை! 5 ஆண்டு ரகசியத்தை உடைத்த ஸ்டாலின் -
இது இந்தியா இல்லை.. நேபாளத்தில் குட்கா போட்டு துப்பிய சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத சம்பவம்












Click it and Unblock the Notifications