
சூடுபிடிக்கும் காங்கிரஸ் தேர்தல்.. 50 வயதுக்கு குறைவான தலித், பெண்களுக்கு முக்கிய பதவி -கார்கே உறுதி
கவுஹாத்தி: காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவியேற்றால் தலித்துகள் பெண்கள் என அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய 50 வயதுக்கும் குறைவானவர்களை கட்சிப் பொறுப்பிற்கு நியமிக்கப்படுவார்கள் என வேட்பாளர் மல்லிகார்ஜுன கார்கே உறுதியளித்து இருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்து வந்த ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததை தொடர்ந்து பதவி விலகினார். அதன் பின்னர் புதிய தலைவராக யாரும் தேர்வு செய்யப்படவில்லை.
காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த சோனியா காந்தியே இடைக்கால தலைவராக பதவியேற்று கட்சியை வழிநடத்தி சென்று கொண்டிருக்கிறார். ஆனால், அடுத்தடுத்த தேர்தல்களில் படுதோல்வியடைந்ததால் அக்கட்சிக்குள் பூசல்கள் வெடித்தன.
போட்றா வெடியை! ஆசை ஆசையாக போஸ்ட் போட்ட பாஜக சவுதா மணி.. கடைசியில் பார்த்தா

தலைவர் தேர்தல்
இந்த நிலையில் அக்டோபர் 17 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அக்டோபர் 19 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 24 தேதி தொடங்கி கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி நிறைவடைந்தது.

வேட்பாளர் பட்டியல்
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளார் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் தலைமை வெளியிட்டது. இதில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசி தரூர் ஆகியோர் நேருக்கு நேர் மோதுகின்றனர். சசி தரூருக்கு கேரள காங்கிரஸ் மற்றும் அகில இந்திய காங்கிரஸில் எதிர்ப்பலை இருப்பதால் கார்கேவுக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.

மல்லிகார்ஜுன கார்கே பிரச்சாரம்
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் இரு தலைவர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் அசாமில் காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து மல்லிகார்ஜுன கார்கே பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், "கூட்டுத்தலைமையின் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். அனைவரையும் இணைத்துக்கொண்டு பயணிக்க விரும்புகிறேன்.

50 வயதுக்கு குறைவானர்கள்
சோனியா காந்தியின் அனுபவத்தையும் அறிவுரையையும் கேட்க வேண்டியது நம் கடமை. உதய்பூர் பிரகடனத்தை அறிமுகம் செய்வதே என் நோக்கம். பெண்கள், பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர்கள், பழங்குடி மக்கள் ஆகியவற்றில் 50 வயதுக்கு குறைவானவர்களை கட்சி பொறுப்பில் நியமித்து புதிய ரத்தம் பாய்ச்சுவேன். பாஜகவை ஒற்றுமையுடன் கட்சி உறுப்பினர்கள் எதிர்த்து போராட வேண்டும்." என்றார்.