"ட்விஸ்ட்!" அமித் ஷா சொல்வது 100% சரி... "இந்தியாவுக்கு" ஜெர்க் கொடுத்த மம்தா.. என்ன சொன்னார்!
கொல்கத்தா: எதிர்க்கட்சிகள் கூட்டணியான "இந்தியா" குறித்து அமைச்சர் அமித் ஷா கிண்டலாகக் கருத்துகளைக் கூறியிருந்த நிலையில், இதற்கு திரிணாமுல் தலைவர் மம்தாவும் பதிலளித்துள்ளார்.
அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து இந்தத் தேர்தலை எதிர்கொள்கிறது. இதற்குக் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் எனப் பல கட்சிகளும் ஒன்றாக இணைந்துள்ளன.

இந்தக் கூட்டணிக்கு "இந்தியா" எனப் பெயரிடப்பட்டுள்ளது. அடுத்தாண்டு நடக்கும் மக்களவை தேர்தலை இந்தக் கூட்டணி ஒன்றாக இணைந்து எதிர்கொள்கிறது. பட்னாவில் முதலில் கூட்டம் போட்ட இவர்கள், அடுத்தடுத்து பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
இதற்கிடையே எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கிண்டலாகக் கருத்து கூறிய நிலையில், இதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நறுக் பதிலைக் கொடுத்துள்ளார். டெல்லியில் அதிகாரிகளை நியமிக்கும் மசோதாவில் ஆம் ஆத்மி கட்சியை ஆதரிக்க வேண்டாம் என எதிர்க்கட்சிகளுக்கு அமித் ஷா வேண்டுகோள் விடுத்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக மம்தா இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.
பாஜக வன்முறையை ஆதரிப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலில் தங்கள் கூட்டணி வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னதாக நாடாளுமன்றத்தில் பேசிய அமித் ஷா, "டெல்லி குறித்து சட்டம் கொண்டு வர எங்களுக்கு உரிமை இருக்கிறது. எதிர்க்கட்சிகள் உங்கள் கூட்டணி குறித்துக் கவலைப்படுவதைக் காட்டிலும் டெல்லி மீது கொஞ்சம் அக்கறை கொள்ளுங்கள். நீங்கள் கூட்டணியில் இருப்பதால், டெல்லியில் நடக்கும் அனைத்து ஊழலையும் ஆதரிக்க வேண்டாம். என்ன தான் கூட்டணிக்கு அமைத்தாலும் தேர்தலில் பிரதமர் மோடி தான் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவார்" என்று கூறியிருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுத்த மம்தா பானர்ஜி, "அமித் ஷா சொன்னது சரி தான்.. டெல்லியின் வெற்றி என்பது இந்தியக் கூட்டணியின் வெற்றியைக் குறிக்கும்" என்றார். அதாவது டெல்லி விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று கூடியுள்ளனர். இது "இந்தியா" கூட்டணிக்குக் கிடைத்த வெற்றி என்பதை அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "எங்கள் கூட்டணி புதியது. நாடு முழுவதும் நாங்கள் இருக்கிறது. நிச்சயமாக, தலைநகர் டெல்லியில் "இந்திய" கூட்டணியின் அரசு அமையும்.. டெல்லியில் எங்கள் நாடாளுமன்றம் உள்ளது. அவர் எந்த அர்த்தத்தில் சொன்னார் எனத் தெரியவில்லை. ஆனால், அமித் ஷா சரியாகவே சொல்லியிருக்கிறார்.

நாடு முழுக்க இப்போது இருக்கும் பேரழிவு, வகுப்புவாத பதற்றம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றில் இருந்து "இந்தியா" தான் நாட்டைக் காப்பாற்றும். இதற்காகவே நாங்கள் வெற்றிபெற வேண்டும். இந்தியா எங்கள் தாய்நாடு, இந்த இந்தியா கூட்டணி எங்கள் தாய்நாட்டிற்கானது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எந்தவொரு மதிப்பும் இல்லை.. இத்தனை ஆண்டுகளாக அவர்கள் கூட்டணி மீட்டிங் கூட நடத்தவில்லை. அங்குக் கூட்டணியில் இருந்த அனைவரும் வெளியேறிவிட்டனர். அவர்கள் கூட்டணி அவ்வளவு தான்
பயங்கரவாதத்தை உருவாக்குவது தான் அவர்களின் பாரம்பரியம்.. அவர்களுக்கு அரசியலமைப்பு என்றால் என்னவென்றே தெரியாது.. இங்குத் தலித்துகள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் சித்திரவதை செய்யப்படுகிறார்கள். செய்தியாளர்களைப் பார்த்துக் கூட நீ இந்துவா அல்லது முஸ்லிமா என்று கேட்கிறார்கள். அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி வன்முறை மட்டுமே.
அவர்கள் வன்முறையைத் தேர்ந்தெடுத்து, அனைத்தையும் காவி நிறமாக்குவார்கள். இதற்காகக் காவி நிறத்தை நாங்கள் வெறுக்கிறோம் என்றில்லை. ஆனால் நாடு முழுவதும் காவி நிறமாக இருந்தால், மற்ற நிறங்கள் எங்கே போகும்? காவி என்பது நமது கடவுள்களின் தெய்வீக நிறம். ஆனால் அதைச் சித்திரவதையைக் குறிக்க அவர்கள் பயன்படுத்துகிறார்கள்" என்று கடுமையாக விளாசினார்.
-
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications