நிதிஷ் குமாரை விடுங்க.. காங்கிரஸிடம் இறங்கி செல்லாத மம்தா பானர்ஜி.. காங்கிரசுக்கு எகிறும் பிரஷர்
கொல்கத்தா: காங்கிரஸ் இல்லாமல்தான் மேற்கு வங்கத்தில் போட்டி என்ற நிலைபாட்டில் உறுதியாக மம்தா இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் செல்லப் போவதில்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்து உள்ளார். அதோடு பாரத் ஜோடோ நியாய யாத்திரை குறித்து தனக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் கூறி உள்ளார். இதைக் கேட்ட காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் தற்போது அவரை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் கட்சியிடம் இறங்கி செல்லும் எண்ணத்தில் இல்லை என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் இல்லாமல்தான் மேற்கு வங்கத்தில் போட்டி என்ற நிலைபாட்டில் உறுதியாக மம்தா இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பீகாரில் பிரச்சனை: பீகாரில் ஏற்கனவே நிதிஷ் குமார் காங்கிரசுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். பீகார் முதல்வர் பதவியை நிதிஷ் குமார் இன்று ராஜினாமா செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
இன்று மாலை மீண்டும் பாஜக ஆதரவுடன் முதல்வராக பொறுப்பேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டசபையில் தற்போது ஜேடியு கூட்டணி ஆட்சி உள்ளது. ஜேடியு, ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் இணைந்து உருவாக்கிய மகா பந்தன் கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. இந்த கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் வெளியேறினால் அவர்களுக்குப் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் கிடைக்காது. இந்த நிலையில் அவர் பாஜகவுடன் இணைந்து கூட்டணி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
79 எம்எல்ஏக்களுடன் லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி தனிப்பெரும் கட்சியாக இருக்கிறது. அவர்களை விட ஒரு இடம் குறைவாக அதாவது 78 எம்எல்ஏக்களுடன் பாஜக இரண்டாவது பெரிய கட்சியாக இருக்கிறது. 45 எம்எல்ஏக்களுடன் நிதிஷ்குமாரின் ஜேடியு மூன்றாவது இடத்திலும் உள்ளது.
இந்தியா கூட்டணி உடைகிறது; இப்படிப்பட்ட நிலையில்தான் காங்கிரஸ் இல்லாமல்தான் மேற்கு வங்கத்தில் போட்டி என்ற நிலைபாட்டில் உறுதியாக மம்தா இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பல்வேறு கட்சிகள் தேசிய அளவில் ஒன்றிணைந்து உருவாக்கியிருக்கும் இந்தியா கூட்டணியின் 4-வது ஆலோசனைக்கூட்டம் சமீபத்தில் டெல்லியில் நடந்தது. இதில்தான் இந்தியா கூட்டணியின் முதல் மோதல் வெளிப்படையாக நடந்தது. சோனியா காந்தி, ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு, நிதிஷ்குமார், லல்லுபிரசாத் யாதவ், சரத்பவார், மம்தா, அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட 28 கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டணியில் சமீப காலமாகவே மோதல்கள் வெடிக்க தொடங்கி உள்ளன. ஒவ்வொரு கூட்டத்திலும் அடுத்த கூட்டம் எப்போது நடக்கும் என்று மட்டுமே ஆலோசனைகள் செய்யப்படுகின்றன. மற்றபடி சீட் ஷேரிங், கூட்டணியின் கொள்கை, பிரதமர் வேட்பாளர் என்று எதுவும் அறிவிக்கப்படுவது இல்லை.
மம்தா ஷாக் அறிவிப்பு; இப்படிப்பட்ட நிலையில்தான், தேசிய அரசியலில் என்ன நடந்தாலும், எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
நாங்கள் மதச்சார்பற்ற கட்சி, மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவுக்கு எதிராக தனித்து போட்டியிட்டு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும். இந்தியா கூட்டணியில் இருந்தாலும் லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடுவோம் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இந்தியா கூட்டணியில் இருக்கிறோம் .. ஆனால் தனித்து போட்டியிடுவோம் என்று அவர் கூறியது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே நிதிஷ் - ஸ்டாலின் உரசல்.. இப்போது மம்தா - காங்கிரஸ் உரசல் ஏற்பட்டு உள்ளது. இந்தியா கூட்டணியில் அடுத்தடுத்து நடந்து வரும் மோதல்கள் காரணமாக.. லோக்சபா தேர்தல் 2024 வரை இந்தியா கூட்டணி தாங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் கொண்ட கட்சிகள் ஒன்றாக இருப்பதால் இந்த கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications