மம்தா எந்த தேர்தலிலும் இப்படி டென்ஷனா இருந்தது இல்லை.. முதல்முறையாக வாக்குப் பதிவு நாளிலும் பிஸி
கொல்கத்தா: மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி அதிகாலை முதலே தனது தொகுதியான பவானிபூரின் வீதிகளில் இறங்கி களப்பணியாற்றி வருகிறார்.

வீதியில் இறங்கிய மம்தா
கடந்த தேர்தல்களின் போது வாக்குப்பதிவு நாளன்று பெரும்பாலும் தனது இல்லத்திலேயே இருந்த மம்தா பானர்ஜி, இந்த முறை யாரும் எதிர்பார்க்காத வகையில் காலை 7 மணி முதலே பவானிபூர் தொகுதியின் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்து வருகிறார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் ஆணையம் மீது சாடல்:
தனது ஆய்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். "வெளியூர்களில் இருந்து ஏராளமான பார்வையாளர்கள் (Observers) இங்கே கொண்டு வரப்பட்டுள்ளனர். அவர்கள் பாஜகவின் உத்தரவின்படியே செயல்படுகிறார்கள். தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயல்படவில்லை" என்று அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். மேலும், சில வாக்குச் சாவடிகளில் தனது கட்சி முகவர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் அவர் புகார் தெரிவித்தார்.

முக்கியப் போட்டி:
பவானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜிக்கு எதிராக பாஜக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி களம் இறங்கியுள்ளார். நந்திகிராம் தொகுதிக்குப் பிறகு மீண்டும் இந்த இரண்டு பெரும் தலைவர்கள் நேரடியாக மோதுவதால் பவானிபூர் தொகுதி 'ஸ்டார்' தொகுதியாக மாறியுள்ளது. இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்புப் பணிக்காகப் பெருமளவில் மத்தியப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications