சாரதா சிட் பண்ட் மோசடி: மேற்கு வங்க அமைச்சர் மதன் மித்ரா கைது! மமதாவுக்கு கடும் நெருக்கடி!!
கொல்கத்தா: நாட்டை உலுக்கிய சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கில் மேற்கு வங்க மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் மதன் மித்ராவை சிபிஐ அதிகாரிகள் இன்று கைது செய்தனர். இதனால் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கு மிகப் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பல்லாயிரம் கோடி அளவுக்கு பொதுமக்கள் பணத்தை வசூலித்துவிட்டு ஏமாற்றியதாக தொடரப்பட்ட சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கில் ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திரிணாமுல் கட்சி எம்.பி குணால் கோஷும் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் திரிணாமுல் கட்சியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கு மிக நெருக்கமான ராஜ்யசபா எம்.பி. சிரின்ஜோய் போஸும் அண்மையில் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து மேற்கு வங்க மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் மதன் மித்ராவை சிபிஐ விசாரணைக்கு அழைத்தது.
மதன் மித்ராவிடம் இன்று காலை முதல் 5 மணி நேரம் துருவித் துருவி விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற மதச்சார்பற்ற கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரே காரணத்துக்காகவே தமது கட்சியினரை சிபிஐ குறி வைத்து கைது செய்வதாக மமதா குற்றம்சாட்டி வருகிறார். இந்நிலையில் மமதா தலைமையிலான அரசின் அமைச்சரும் கைது செய்யப்பட்டுள்ளது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications