“கேம்” ஸ்டார்ட் ! மம்தா கொடுத்த “வலிமை”யான அப்டேட்.. 2024 தேர்தலில் பாஜகவுக்கு எதிராக “மெகா” கூட்டணி
கொல்கத்தா: 2024 மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக மாநில கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்து இருக்கிறார்.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் நிர்வாகிகள் தொண்டர்கள் முன்பாக அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி பேசினார்.
அப்போது, "பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநில ஆளும் கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகள் மற்றும் நம்முடன் இணைந்து 2024 மக்களவை தேர்தலில் போட்டியிட்டு பாஜகவை அதிகாரத்தில் இருந்து அகற்ற முடிவு செய்து உள்ளார்கள். ஆணவம் மற்றும் மக்கள் மத்தியில் இருக்கும் கோபத்தின் காரணமாக பாஜக அதிகாரத்தை இழக்கும்.

எதிர்கட்சி கூட்டணி
நான், நிதீஷ் குமார், ஹேமந்த் சோரென் மற்றும் பலர் 2024 நாடாளுமன்ற தேர்தல் இணைய உள்ளோம். பாஜகவை வீழ்த்துவதற்கு அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் ஒன்றிணைய வேண்டும். நாம் அனைவரும் ஒரே பக்கத்தில் நிற்க வேண்டும். பாஜக அடுத்த பக்கத்தில் இருக்க வேண்டும்.

ஆட்டம் தொடக்கம்
2024 தேர்தலுக்கான ஆட்டம் தொடங்கிவிட்டது. 300 தொகுதிகள் என்ற ஆணவமே பாஜகவுக்கு இந்த தேர்தலில் எதிராக நிற்கும். கடந்த ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் போர் முழக்கமாக கேலா ஹோப் (ஆட்டம் தொடங்கிவிட்டது) இருந்தது. அதில் வெற்றிபெற்று திரிணாமூல் 3 வது முறையாக ஆட்சியமைத்தது.

ஜார்க்கண்ட்
மேற்கு வங்க காவல்துறை ஜார்க்கண்ட் எம்.எல்.ஏக்களை கைது செய்து அம்மாநிலத்தில் குதிரை பேரத்தை தடுத்து நிறுத்தியது. ஹேமந்த் சோரன் அரசாங்கம் கவிழாமல் தடுத்தது." என்றார். கடந்த ஜூலை மாதம் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் காரில் கட்டுக்கட்டான பணத்துடன் மேற்கு வங்க வழியாக கைது செய்யப்பட்டபோது கைது செய்யப்பட்டார்கள்.

குதிரை பேரம்
இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் - ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணியை கவிழ்க்க பாஜக எம்.எல்.ஏக்களுக்கு ரூ.10 கோடி வழங்க முன்வந்ததுடன் அமைச்சர் பதவியும் வழங்குவதாக வாக்குறுதியளித்ததாக முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தெரிவித்து இருந்தார். சில நாட்களுக்கு முன்பாக அம்மாநில சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜே.எம்.எம். வெற்றிபெற்றது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications