முதல்ல ஜிஎஸ்டி நிலுவை பணத்தை கொடுங்க..அப்புறம் எங்களை குறை சொல்லுங்க..மோடியை விளாசும் மம்தா பானர்ஜி!
கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அரசின் செயல்பாடுகளால் மத்திய அரசின் விவசாய நிதி திட்ட பலன்கள் அங்குள்ள விவசாயிகளை சென்றடைவதில்லை என பிரதமர் குற்றம்சாட்டினார். இதற்கு பதில் அளித்துள்ள மம்தா பானர்ஜி, அரசியல் ஆதாயத்திற்கான தீங்கிழைக்கும் பிரசாரத்தை பிரதமர் மோடி செய்து வருவதாக தெரிவித்து உள்ளார்.
மோடி உண்மையிலேயே தங்களது மாநிலத்திற்கு உதவ விரும்பினால், ஜிஎஸ்டி நிலுவைத் தொகையில் ஒரு பகுதியையாவது உடனே விடுவிக்க வேண்டும் என அவர் கூறி உள்ளார்.

நாட்டின் 9 கோடி விவசாய குடும்பங்களுக்கு இன்று ரூ.18,000 கோடியை வழங்கிப் பேசிய பிரதமர் மோடி, மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி அரசின் செயல்பாடுகளால் மத்திய அரசின் விவசாய நிதி திட்ட பலன்கள் அங்குள்ள விவசாயிகளை சென்றடைவதில்லை என குற்றம்சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள மம்தா பானர்ஜி, அரசியல் ஆதாயத்திற்கான தீங்கிழைக்கும் பிரசாரத்தை பிரதமர் மோடி செய்து வருவதாக தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக மம்தா பானர்ஜி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
மத்திய அரசு அரசியல் லாபங்களுக்காக எங்கள் மீது தீங்கிழைக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. பிரதமர் மோடி அரைகுறை உண்மையுடனும், சிதைந்த உண்மைகளுடன் மக்களை தவறாக வழிநடத்த முயற்சி செய்து வருகிறார். பிரதமர் மோடியின் பேச்சு தூய அரசியல் தோரணையாகும்.
நாங்கள் மத்திய அரசின் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இப்படி இருக்கையில் விவசாயிகளுக்கு பயனளிக்கும் ஒரு திட்டத்திற்கு ஒத்துழைக்கவில்லை என்ற கேள்வி அபத்தமானது.
விவசாயிகளின் நலனுக்காக மேற்கு வங்கம் மத்திய அரசுடன் ஒத்துழைக்க தயாராக உள்ளது. நான் தனிப்பட்ட முறையில் இரண்டு கடிதங்களை எழுதியுள்ளேன், சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் இரண்டு நாட்களுக்கு முன்பு பேசியிருக்கிறேன், ஆனால் அவர்கள் ஒத்துழைக்க மறுக்கிறார்கள்.
ரூ.8,000 கோடி செலுத்தப்படாத ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உள்ளடக்கிய ரூ.85,000 கோடி நிலுவைத் தொகையில் ஒரு பகுதியை கூட அவர்கள் இன்னும் வெளியிடவில்லை. அவர் (மோடி) உண்மையிலேயே மாநிலத்திற்கு உதவ விரும்பினால், அவர் இந்த நிதியில் ஒரு பகுதியையாவது விடுவிக்க வேண்டும் எங்கள் தேவைகளை நிவர்த்தி செய்ய நாங்கள் ஒரு சிறந்த நிலையில் இருக்கிறோம் என்று மம்தா பானர்ஜி தெரிவித்து உள்ளார்.
-
6வது இடத்துக்கு தள்ளப்பட்ட சென்னை விமான நிலையம்.. முந்திய பெங்களூர்! பிசியான ஏர்போர்ட் லிஸ்ட் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications