'நானே ஒரு பிராமணர் தான்.. எனக்கு யாரும் நற்சான்றிதழ் தர தேவையில்லை..' கோவா தேர்தல்.. விளாசும் மம்தா
கோவா: கோவா சென்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா, தான் ஒரு பிராமணர் என்றும் பாஜக ஒன்றும் தனக்கு நற்சான்றிதழ் தர தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அடுத்தாண்டு தொக்கத்தில் மொத்தம் 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அதில் பஞ்சாப் தவிர மற்ற 4 மாநிலங்களில் பாஜகவே ஆளும் கட்சியாக உள்ளது.
கொரோனா 2ஆம் அலைக்குப் பின்னர், பாஜக மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகப் பரவலாகக் கூறப்படும் நிலையில், இந்தத் தேர்தல் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

திரிணாமுல் காங்கிரஸ்
ஒரு புறம் மீண்டும் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக களமிறங்குகிறது. அதேநேரம் மறுபுறம் திராணாமுல் காங்கிரஸ் கட்சியும் மேற்கு வங்கம் தாண்டி மற்ற மாநிலங்களிலும் கட்சியைப் பலப்படுத்தும் பணிகளில் இறங்கியுள்ளன. முதற்கட்டமாக அடுத்தாண்டு தேர்தல் நடைபெறும் கோவாவில் கட்சியை வலுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் மம்தா. ஏற்கனவே, காங்கிரஸ் உள்ளிட்ட பல முக்கிய கட்சிகளில் இருந்து முக்கிய தலைவர்கள் திரிணாமுல் காங்கிரஸில் ஐக்கியமாகி வருகின்றனர்.

பொதுமக்கள் ஒன்றுபட வேண்டும்
இந்நிலையில், வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு 2 நாள் பயணமாக மம்தா பானர்ஜி கோவா சென்றுள்ளார். அங்குச் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி பாஜகவை மிகக் கடுமையாக விமர்சித்தார். இது குறித்து அவர் கூறுகையில், "கோவாவில் பாரதிய ஜனதா கட்சியை நாம் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். இதற்காகப் பொதுமக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். நான் உங்களை எதிர்க்க வரவில்லை, வெளியாட்கள் யாரும் கோவாவைக் கட்டுப்படுத்துவதை நான் விரும்பவில்லை.

நான் ஒரு பிராமணர்
நான் பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவள். நான் ஒரு பிராமணர். எனக்கு பாஜகவிடம் இருந்து ஒன்றும் நற்சான்றிதழ்கள் தேவையில்லை" என்று கடுமையாகத் தாக்கி பேசினார். அதேபோல மம்தா தனது ட்விட்டர் கணக்கிலும் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் மம்தா பானர்ஜி இந்து பாடல்களைப் பாடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்த ஆண்டு தொடக்கத்தில் பாஜகவுக்கு எதிராக மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியை மம்தா பதிவு செய்திருந்தார். ஏற்கனவே தேசியளவில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவராக இருந்த மம்தாவின் இமேஜை அது மேலும் உயர்த்தியது.

கூட்டணி கணக்கு
அடுத்தகட்டமாக 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைக்கும் நோக்கத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அதேநேரம் சமீப காலமாகக் காங்கிரஸ் கட்சியுடன் மம்தா சற்று முரண்பட்டே நிற்கிறார். சமீபத்தில் கூட இப்போது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தற்போது இல்லை என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதேநேரம் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் காங்கிரஸ் இல்லாமல் தேசியளவில் எதிர்க்கட்சி கூட்டணியைக் கட்டமைக்க முடியாது எனத் தெரிவித்திருந்தார். மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி, சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

மறைமுகமாகத் தாக்கு
முன்னதாக கடந்த திங்கட்கிழமை பேரணியில் காங்கிரஸ் கட்சியை மறைமுகமாகத் தாக்கி பேசிய மம்தா, "ஒரு கட்சி பாஜகவைத் தோற்கடிக்க எதுவும் செய்யவில்லை என்பதற்காக மற்ற கட்சிகளும் எதுவும் செய்ய மாட்டார்கள் என்று நினைப்பது சரியல்ல. யாராவது பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என விரும்பினால், அவர்கள் எங்களை ஆதரிக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார். மம்தா பானர்ஜி கோவாவுக்கு வருவது இது 2ஆவது முறையாகும். அப்போது பாஜக தொடர்ந்து பிரிவினைவாதத்தைப் பரப்பி வருவதாக விமர்சித்த அவர், பாஜக ஆட்சியிலுள்ள எந்த மாநிலத்திலும் பொதுமக்களால் நிம்மதியாக வெளியே வர முடியாது என்று விமர்சித்தார். மம்தா தேசியளவில் முக்கிய தலைவராக உருவெடுத்து வரும் நிலையில், அடுத்தாண்டு நடைபெறும் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
ஓவர் நைட்டில் பேமஸான.. அங்கீகாரமே இல்லாத NCPI கட்சி! TMC எம்பிக்கள் என்ன பண்ணியிருக்காங்கனு பாருங்க -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
மம்தாவிற்கு பேரிடி.. 20 அதிருப்தி எம்பிக்கள் "என்சிபிஐ" கட்சியில் ஐக்கியம்.. பின்னணியில் மெகா பிளான் -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
லம்பாக அமவுண்டை அமுக்கிய தலைகள்.. ராகுலுக்குப் போன மெசேஜ்! அடுத்தடுத்த ஆக்ஷனுக்கு தயாராகும் காங்.,! -
மமதாவின் கோட்டை தகர்கிறதா? அதிருப்தி எம்பிக்கள் எடுத்த அதிரடி முடிவு!












Click it and Unblock the Notifications