தேசியவாதம் குறித்து நமக்கு பாடம் நடத்துறாங்க...ஆனா நாட்டு வளத்தை விக்கிறாங்க...பாஜகவை விளாசிய மம்தா!
கொல்கத்தா: மத்திய பட்ஜெட் விவசாயிகள் எதிர்ப்பு, மக்கள் எதிர்ப்பு மற்றும் நாட்டுக்கு எதிரான பட்ஜெட் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.
பா.ஜ.க.வினர் தேசியவாதம் குறித்து மற்றவர்களுக்கு சொற்பொழிவு நடத்துகிறார்கள். ஆனால் அவர்கள்தான் நாட்டை விற்கிறார்கள் என்றும் பாஜகவை அவர் கடுமையாக சாடினார் .

நாட்டின் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், கடும் எதிர்பார்ப்புக்கு இடையில் 2021-22-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். சுகாதாரத்துறைக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பட்ஜெட் குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்துள்ளார். மேற்கு வங்கத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- மத்திய பட்ஜெட் மக்களை ஏமாற்றுவதற்கான பட்ஜெட். விவசாயிகள் எதிர்ப்பு, மக்கள் எதிர்ப்பு மற்றும் நாட்டுக்கு எதிரான பட்ஜெட்தான் இது.
அவர்கள் (பா.ஜ.க) தேசியவாதம் குறித்து மற்றவர்களுக்கு சொற்பொழிவு நடத்துகிறார்கள். ஆனால் ஒரு வரைமுறையில்லாமல் அவர்கள்தான் நாட்டை விற்கிறார்கள். பொதுத்துறை நிறுவனங்கள், காப்பீடு, ரெயில்வே மற்றும் துறைமுகங்கள் என அனைத்தையும் தனியாரிடம் விற்கிறார்கள் என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications