5 மாதத்தில் மம்தா ஆட்சி கவிழ்ந்து விடும்.. நாள் குறித்த பாஜக.. சூடாக திரிணாமூல் காங். கொடுத்த பதிலடி
கொல்கத்தா: மம்தா பானர்ஜியின் ஆட்சி ஐந்து மாதங்களில் கவிழ்ந்து விடும் என்று பாஜக கூறியுள்ளது. இந்த விவகாரம் மேற்கு வங்காள அரசியலில் திரிணாமூல் காங்கிரஸ் - பாஜக இடையேயான வார்த்தை போருக்கு வித்திட்டுள்ளது.
மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக மம்தா பானர்ஜி உள்ளார். மம்தா பானர்ஜிக்கும் பாஜக அரசுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசை வரும் தேர்தலில் வீழ்த்தியே ஆக வேண்டும் என்பதில் மம்தா பானர்ஜி உறுதியாக உள்ளார். இதற்காக எதிர்கட்சிகளின் ஒருங்கிணைந்த கூட்டத்திலும் மம்தா பானர்ஜி முக்கிய பங்காற்றி வருகிறார்.

அதே வேளையில், மாநிலத்திலும் மம்தா பானர்ஜிக்கு பாஜக கடும் சவால் அளித்து வருகிறது. சமீபத்தில் நடந்த முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மம்தா பானர்ஜி கட்சி அதிக இடங்களில் வென்றாலும் பாஜக கடும் சவால் கொடுத்தது. வன்முறை, ரத்த களறியுடன் நடந்த உள்ளாட்சி தேர்தல் நாடு தழுவிய அளவில் கவனம் பெறுவதாக இருந்தது. இப்படி பாஜகவுடன் முட்டல் மோதலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டு வருவது அம்மாநில அரசியலில் பரபரப்புக்கு சற்றும் பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.
மேற்கு வங்காள பாஜக நிர்வாகிகளுக்கும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தொடர்ந்து வார்த்தை யுத்தமும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மத்திய அமைச்சரும் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள போங்கான் தொகுதி எம்.பியுமான ஷாந்தனு தாகூர் பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். இந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:-
"மேற்கு வங்க அரசின் செயல்பாடு காலாவதியாகிவிட்டது. அண்மையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மோசடி நடக்காமல் இருந்து இருந்தால் பாஜக ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றிருக்கும். அதே வேளையில் திரிணாமூல் காங்கிரஸ் அரசு கண்காணிப்பில் நடைபெறும் கடைசி தேர்தல் இதுதான். ஐந்து மாதங்களுக்கு மேல் மம்தா பானர்ஜி ஆட்சி நீடிக்காது என நான் நம்புகிறேன் " இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக மாநில தலைவர் சுகந்தா மஜும்தாரிடம் மம்தா ஆட்சி 5 மாதங்களுக்கு மேல் நீடிக்காது என்று மத்திய அமைச்சர் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த மஜும்தார் கூறுகையில், "எது வேண்டுமானாலும் எப்போதும் நடக்கலாம். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.
மம்தா பானர்ஜி பின் தொடர்ந்து செல்ல முடியாது என்று அவரது கட்சி எம்.எல்.ஏக்களே திடீரென மறுக்கலாம். யாருக்கு தெரியும். இப்படி நடக்கும் என்று நான் கூறவில்லை. ஆனால் அரசியலில் எதுவும் நடக்கலாம்" என்றார். பாஜக தலைவரின் இந்த பேச்சு மேற்கு வங்காள அரசியலில் பரபரப்பை கிளப்பி விட்டது. இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி ஷாந்தனு சென் கூறியதாவது:-
டெல்லியில் தங்கள் மதிப்பை அதிகரித்துக் கொள்வதற்கு பாஜக தலைவர்களுக்கு இடையே தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பெரும் மக்கள் ஆதரவுடன் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. எங்களுக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளது" என்றார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications