For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனா அதிவேகம்.. மீதமுள்ள 4 கட்ட வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்.. கோரிக்கை வைக்கும் மம்தா!

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் அதிகரித்து வரும் கொரோனவை கருத்தில் கொண்டு மீதமுள்ள நான்கு கட்ட வாக்குப்பதிவையும் ஒரே நாளில் நடத்தவேண்டும் என்று மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகம், அசாம், கேரளா , புதுவை ஆகிய 4 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் முடிந்து விட்டது. 294 சட்டசபை தொகுதிகளை கொண்ட மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

Mamata Urges EC to Hold Elections for Remaining Phases at One day

இதில் 4 கட்டங்கள் வாக்குப்பதிவு முடிந்துள்ளது. இன்னும் 4 கட்டங்கள் வாக்குப்பதிவு நடத்த வேண்டிள்ளது. தற்போது கொரோனா வேகமாக அதிகரித்து வருவதால் மீதமுள்ள தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.

கொரோனாவை பரப்பியதே பாஜக தான்.. இப்போது வாக்கு வேறு கேட்கிறார்கள்... பகீர் கிளப்பும் மம்தாகொரோனாவை பரப்பியதே பாஜக தான்.. இப்போது வாக்கு வேறு கேட்கிறார்கள்... பகீர் கிளப்பும் மம்தா

இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இதே கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள மம்தா பானர்ஜி, ' தொடர்ச்சியான கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மேற்கு வங்கத்தில் வாக்கெடுப்புகளை 8 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் எடுத்த முடிவை நாங்கள் உறுதியாக எதிர்த்தோம்.

இப்போது,கொரோனாவின் மிகப்பெரிய எழுச்சியைக் கருத்தில் கொண்டு, மீதமுள்ள கட்டங்களை ஒரே நாளில் நடத்துவது குறித்து பரிசீலிக்க தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொள்கிறேன்,. இதன் மூலம் கொரோனா பாதிப்பு கூடுதல் அதிகரிப்பது தடுக்கப்படும். மக்களை பாதுகாக்க முடிவும் என்று கூறினார்.

English summary
Mamata Banerjee has demanded that the remaining four phases of the polls be held on the same day in view of the rising tide in West Bengal
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X