ஆடம்பர செலவு, கழுத்தை நெரித்த கடன்.. பட்டப்பகலில் வங்கியில் கொள்ளையடித்த நபர்.. கேரளத்தில் பரபரப்பு
திரிச்சூர்: திரிச்சூர் மாவட்டம், சாலக்குடி அருகே பட்டப்பகலில் வங்கிக்குள் நுழைந்த நபர் ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டி லட்சக்கணக்கில் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சாலக்குடியைச் சேர்ந்த நபர் ஒருவரை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
நாட்டில் சமீபகாலமாக கொள்ளை, கொலை சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. ஒரு காலத்தில் சேமிப்பில் இருந்து சொத்துகளை வாங்கக்கூடிய காலம் இருந்தது. ஆனால், இப்போதெல்லாம் கடனில் இருந்துதான் சொத்துகளை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு நல்ல நிறுவனத்தில் குறிப்பிட்ட சம்பளத்தில் இருந்தாலே போதும் வங்கியில் இருந்து கடன் வேண்டுமா, கடன் வேண்டுமா என்று நாள்தோறும் குறுச்செய்தி, மெயில், தொலைபேசி மூலமாக நச்சரிக்கத் தொடங்கிவிடுவர்.

சொந்த வீடு, கார் போன்றவற்றை வாங்க வேண்டும் என்பதற்காக எளிமையாக கிடைக்கும் வங்கிக் கடனில் பெரும்பாலானோர் சிக்கிக் கொள்கின்றனர். ஒருகட்டத்தில் அதீத வட்டி, சம்பளத்தில் 50 சதவீதத்துக்கு மேல் கடனை மட்டும் கட்டுவது போன்றவற்றால் பிரச்சனைகளில் சிக்கிக் கொள்கின்றனர். ஒருகட்டத்தில் இந்த கடன் பிரச்சனை உயிரையே மாய்க்கும் அளவுக்கு கொண்டு சென்று விடுகிறது.
இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து மனைவி அனுப்பிய பணத்தை செலவழித்த நபர் ஒருவர் அந்தக் கடனை எப்படி அடைப்பதென்று தெரியாமல் கேரள மாநிலம், திரிச்சூரில் உள்ள ஒரு வங்கிக்குள் பட்டப்பகலில் புகுந்து கத்திமுனையில் வங்கியில் கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக சாலக்குடியைச் சேர்ந்த நபரை காவல் துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், சாலக்குடி பகுதியில் வங்கி ஒன்று அமைந்துள்ளது. இந்த வங்கிக்கு வெள்ளிக்கிழமை மதியம் 2.15 மணியளவில் மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். ஹெல்மெட், கிளவுஸ், பேகுடன் வங்கிக்குள் நுழைந்த அந்த நபர் கத்தியைக் காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளார். அதிர்ச்சிக்குள்ளான வங்கி நிர்வாகத்தினர் உடனடியாக போலீஸாருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த மர்மநபரை சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் கண்டுபிடிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். சம்பவம் நடந்த மூன்று நாட்களுக்குப் பிறகு சுமார் 15 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற நபரை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர் சாலக்குடியைச் சேர்ந்த ரிஜோ ஆண்டனி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் கடனை அடைப்பதற்காக வங்கிக்குள் புகுந்து பணத்தை கொள்ளையடித்ததை ரிஜோ ஆண்டனி போலீஸாரிடம் ஒப்புக் கொண்டார். இதையடுத்து, அவரது வீட்டில் வைத்தே போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.
ரிஜோ ஆண்டனியிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டுள்ளது. மீதி தொகையை மீட்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீஸார் கூறுகையில், திட்டமிடப்பட்டு அந்த நபரிடம் விசராணை மேற்கொள்ளப்பட்டதால் அந்த நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ரிஜோ ஆண்டனி இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னரே இந்த வங்கிக்கு வந்து அதிகாரிகள் எந்த சமயத்தில் இல்லாமல் இருந்துள்ளனர் என்பதை நோட்டமிட்டுள்ளார்.
அதன் பிறகுதான் இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். இவருடைய மனைவி வெளிநாட்டில் செவிலியராகப் பணிபுரிந்து வந்துள்ளார். அவர் அனுப்பும் பணத்தை ரிஜோ ஆண்டனி ஆடம்பரமாக செலவழித்து வாழ்க்கையை அனுபவித்து வந்துள்ளார். இந்நிலையில், மனைவி திரும்பி வருவதற்குள் அந்த கடன் தொகையை எப்படியாவது திருப்பி செலுத்தி விட வேண்டும் என்பதற்காக இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications