பாலக்காடு: பெற்ற மகளை பலாத்காரம் செய்த தந்தை கைது
திருவனந்தபுரம்: கேரளாவில் பெற்ற மகளையே இரண்டு ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மங்கரை கிராமத்தை சேர்ந்த அப்துல் ரகுமானுக்கு (47) ஐந்து மகள்கள். இதில் இரண்டாவது மகள் நஸ்ரியா (16) பிளஸ் 2 படித்து வருகிறார்.
ஒருநாள் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் நஸ்ரியாவை தாக்கி வலுகட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் ரகுமான். இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் ரகுமான் மிரட்டியுள்ளார்.
தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியே சொல்ல முடியாமல் நஸ்ரியா தவித்து வந்துள்ளார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ரகுமான், கடந்த 2 ஆண்டுகளாக மகளை மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதன் விளைவாக நஸ்ரியா கர்ப்பமானார். மருத்துவரிடம் அழைத்து சென்று கர்ப்பத்தையும் கலைத்துள்ளார் ரகுமான்.
கடந்த ஒரு மாதமாக ரகுமானின் கொடுமை எல்லை மீறியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு செல்போனில் ஆபாச படங்களை காட்டி நஸ்ரியாவை பாலியல் உறவுக்கு அழைத்துள்ளார். ஆனால், நஸ்ரினா மறுக்கவே, கொலை செய்து விடுவதாக மிரட்டி தனது ஆசையை தீர்த்துக் கொண்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் பாலியல் தொந்தரவு அதிகரிக்கவே மனம் வெறுப்படைந்து நஸ்ரினா, தனது தாயிடம் நடந்த விவரங்களை கூறி அழுது இருக்கிறார். இது குறித்து நஸ்ரியாவின் தாயார் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் ரகுமானை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
நஸ்ரியாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், பாலியல் கொடுமைக்கு உள்ளானதை உறுதி செய்தனர். இதைத் தொடர்ந்து நஸ்ரியா அரசு மகளிர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications