திடீரென வெளியே வந்த பெண்ணின் பிணம்.. அலறி தெறித்து ஓடிய மக்கள்.. சிக்கிய கோவா துக்காராம்!
கோவா: மண்ணுக்குள் இருந்து பெண்ணின் பிணம் நீட்டிக் கொண்டு வெளியே வந்ததை கண்டு பொதுமக்கள் தெறித்து ஓடினர்.. கட்டின கணவனே மனைவியை உயிருடன் புதைத்து கொன்ற இந்த சம்பவம் கோவா மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
கோவாவில் கூலி வேலை செய்து வருபவர் துக்காராம்.. இவரது மனைவி 44 வயது தான்வி.. ரொம்ப நாளாகவே தான்விக்கு உடம்பு சரியில்லை... அதனால் படுத்த படுக்கையாக இருந்து வந்தார்.

இதனால் துக்காராம்தான் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று தான்வியை கவனித்து வந்தார். கூலி தொழிலாளி என்பதால், துக்காராம் பணத்துக்கு கஷ்டப்பட்டார்.. அதனால் தான்விக்கு மருத்துவமும் பார்க்க முடியவில்லை.. நோயுடன் போராடும் மனைவியை கண்முன்னாடி வைத்து கொண்டு, சிகிச்சைக்கு பணமும் இல்லாமல் மிகுந்த வேதனைக்கு ஆளானார். அதனால், மனைவியை கொன்றுவிடலாம் என்று துக்காராம் முடிவு செய்தார்.
அதற்காக தான்வியை நர்விம் என்ற கிராமத்துக்கு அழைத்து சென்று, அங்கே ஒரு கால்வாய் அருகே உயிருடன் புதைத்தும் விட்டார். இதனிடையே தான்வியை புதைத்த அந்த கால்வாய் பகுதியில் நீர்ப்பாசன திட்டத்துக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
வழக்கம்போல் தொழிலாளர்கள் பள்ளம் தோண்டி கொண்டிருந்தனர்.. அப்போது, இதை பார்த்து அதிர்ந்து போன துக்காராம்.. "வேண்டாம்.. இங்கே பள்ளம் தோண்டாதீங்க.. வேலையை நிறுத்துங்க" என்று அலறி கத்தினார். ஆனாலும் ஊழியர்கள் இதை காதில் வாங்காமல் தொடர்ந்து பள்ளம் நோண்டினர்.
ஆனால் துக்காராம் அங்கேயே உட்கார்ந்துவிட்டார்.. படபடப்பாகவே இருந்தார்.. முதல் பக்கெட்டில் மண் அள்ளி போடப்பட்டுவிட்டது.. இரண்டாம் பக்கெட்டில் மண்ணை அள்ளும்போதுதான் என்னமோ தட்டுப்பட்டுள்ளது. அதனால் மிஷினை நிறுத்திவிட்டு, அது என்ன என்று பள்ளத்தில் சென்று பார்த்தனர்.. அப்போதுதான், ஒரு பெண்ணின் உடல் மண்ணுக்கு வெளியே நீட்டிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ந்தனர்.
உடனடியாக இதை பற்றி போலீசில் புகார் சொல்லவும், துக்காராமிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் சொல்லும்போது, "என் மனைவிக்கு உடம்பு சரியில்லை.. சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை.. மருந்து செலவுக்கு காசும் இல்லை.
பணம் இல்லாததால் என் 14 வயது மகனை ஸ்கூலுக்கும் அனுப்ப முடியவில்லை.. அதனாலதான் உயிருடன் கொன்றுவிட்டேன்.. அந்த இடத்துக்கு யாரும் வர மாட்டாங்கன்னு நினைச்சேன்.. ஆனா, இப்படி வந்து பள்ளம் நோண்டுவாங்கன்னு எதிர்பார்க்கவில்லை" என்றார். இதையடுத்து, மனைவியை உயிருடன் புதைத்த துக்காராமை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications