ஆசை ஆசையாய் ரூ.17.5 லட்சத்துக்கு வாங்கிய கார்.. கடைசியில் வேதனை! கழுதையை கட்டி இழுத்து சென்ற அவலம்
ஜெய்பூர்: ஆசை ஆசையாய் ரூபாய் 17 லட்சத்து 50 ஆயிரத்துக்கு வாங்கிய கார் அடிக்கடி ரீப்பேர் ஆகியதால், அந்த உரிமையாளர் காரை கழுதையை கட்டி இழுக்க வைத்து ஷோரூமிற்கு கொண்டு சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
சொந்தமாக ஒரு கார் வாங்க வேண்டும் என்பது நடுத்தர மக்களுக்கு இருக்கும் கனவுகளில் ஒன்றாக நிச்சயம் இருக்கும். என்னதான் வெளியில் செல்லும் போது வாடகை கார் பிடித்துக் கொண்டு சென்றாலும் சொந்தமாக கார் வாங்கி அதில் பயணிப்பதே தனி சுகம்தான்.

வெளியூர்களுக்கு செல்லும் போதும் குடும்பத்துடன் ஜாலியாக ட்ரிப் அடிக்கும் போது சொந்தக்காரில் பயணிப்பதுதான் அலாதி மகிழ்ச்சியை கொடுக்கும். அதனால் சொந்தமாக கார் வாங்கி அதில் குடும்பத்துடன் செல்ல வேண்டும் என்று பலரும் நீண்ட காலமாக திட்டமிட்டு அதை நனவாக்க பெரும் முயற்சி எடுப்பார்கள்.
இப்படி பெரும் கனவுகளுடன் போராட்டத்துடன் வாங்கிய கார் வாங்கிய உடனேயே ரிப்பேர் ஆகி உங்களுக்கு சோதனை கொடுத்தால் நமது மனநிலை எப்படி இருக்கும்? என்று யோசித்து பாருங்கள்.. அதேபோன்ற ஒரு நிகழ்வுதான் ராஜஸ்தானில் நடைபெற்றுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் பகுதியை சேர்ந்தவர் ஷங்கர்லால் . இவருக்கு சொந்தமாக கார் வேங்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாம். இதற்காக கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை கொண்டு ரூ.17.5 லட்சத்திற்கு கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த காரை வாங்கி ஊர் முழுக்க ஒரு ரவுண்ட் அடித்து விடலாம் என்று நினைத்த அவருக்கு வாங்கிய முதல் நாள் முதலே பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது.
ஆம், வாங்கியதில் இருந்தே ஷங்கர் லால் வாங்கிய புது கார் பழுதாகி நின்று கொண்டே இருந்து இருக்கிறது. இதனால், அதிர்ச்சி அடைந்த ஷங்கர் லால் காரை சர்வீஸ் செண்டருக்கு எடுத்து சென்றுள்ளார். ஆனால், அவர்கள் பிரச்சினையை முழுமையாக சரி செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், மீண்டும் அந்தக் கார் பழுதாகி நடு ரோட்டில் நின்றது.
இதனால் வெறுத்து போன ஷங்கர் லால் ஷோரூமிற்கு காரை எடுத்துசெல்ல திட்டமிட்டுள்ளார். எனினும், புதிய கார் அடிக்கடி பழுதாகி நின்ற கோபத்தில் அவர் இரு கழுதைகளை கட்டி காரை இழுக்க வைத்துள்ளார். இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. அதில், கழுதைகள் காரை இழுத்து செல்வதும் காருக்கு பின்னால் இருந்து சிலர் தள்ளும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
இது குறித்து ஷங்கர் லாலின் உறவினர் ராஜ்குமார் கயாரி கூறுகையில், " இந்த கார் ஏற்கனவே இரண்டு முறை சர்வீஸ் செண்டருக்கு கொண்டு வந்தோம். ஆனால் அவர்கள் சரியாக சர்வீஸ் செய்து கொடுக்கவில்லை. குடும்ப நிகழ்ச்சி ஒன்றின் போது இந்த கார் பலமுறை ஸ்டார்ட் ஆகாமல் நின்றது. இதனால், தள்ளியே ஸ்டார்ட் செய்தோம்.
ஷோ ரூம் ஊழியர்களிடம் இது குறித்து கேட்ட போது பேட்டரியில் சார்ஜ் இல்லாமல் போனதால் இந்த நிலை ஏற்பட்டு விட்டதாகவும் சிறிது தூரம் ஓட்டினால் பிரச்சினை சரியாகிவிடும் என்றனர். ஆனால், இது பலனளிக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள், காரை மீண்டும் ஷோரூமிற்கே கொன்டு விட வேண்டும் என்று முடிவு செய்தோம்" என்றார். தற்போது காரை ஷோரூமில் விட்டுள்ள ஷங்கர் லால் தனக்கு புது கார் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
புதிய காரை கழுதையை கட்டி இழுத்து வரும் காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகின்றன. நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். நெட்டிசன்கள் பலரும் ஷோரூம்களில் சரியான ரெஸ்பான்ஸ் கொடுப்பது இல்லை எனவும் தங்கள் ஆதங்கத்தை கொட்டி வருகின்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications