ஆர்.டி.ஐயில் தகவல் கேட்டதுக்கு அதிகாரி செய்த சம்பவம்.. 40 ஆயிரம் பக்கம்.. அதிர்ந்து போன நபர்!
போபால்: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஒருவர் கொரோனா பெருந்தொற்று தொடர்பாக சில விவரங்களை கேட்டுள்ளார். இதற்கு 40 ஆயிரம் பக்கங்களில் தகவல்களை அளித்து கேட்டவரை ஒரு நொடி மிரளவைத்து இருக்கிறார்கள் ஆர்.டி.ஐ. அதிகாரிகள்.
அரசு அமைப்புகளின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் உள்ளிட்டவற்றின் விவரங்களை சாதாரண பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வகையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை மத்திய அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு கொண்டு வந்தது. இந்தச் சட்டத்தின் கீழ், இந்தியாவின் எந்தவொரு நபரும் அரசின் அமைப்பிலிருந்து தகவல்களைக் கோரலாம். உடனடியாகவோ அல்லது முப்பது நாட்களுக்குள்ளோ பதிலளிக்க வேண்டும்.

சில விதி விலக்குகளில் மட்டுமே தகவல்களை தர அனுமதி மறுக்க முடியும். பல்வேறு சமூக ஆர்வலரும் அரசின் திட்டங்கள் பற்றியும், குறிப்பிட்ட திட்டத்திற்கு ஆன செலவு எவ்வளவு உள்ளிட்ட விவரங்களை பற்றியும் ஆர்.டி.ஐ மூலமாக கேட்டு பெறுவது வழக்கமாக உள்ளது. இதனால், திட்டங்களில் ஏதேனும் முறைகேடுகள் நடந்தாலோ, அரசு அதிகாரிகள் மெத்தனம் காட்டினால் கூட வெளிச்சத்திற்கு வருகிறது. சரி இங்கே விஷயத்திற்கு வருவோம்.
மத்திய பிரதேச மாநிலத்தில், தர்மேந்திர சுக்லா என்பவர் கொரோனா பெருந்தொற்று தொடர்பாக ஆர்.டி.ஐ மூலமாக விவரங்கள் கேட்டுள்ளார். இதற்கு 40 ஆயிரம் பக்கங்களில் தகவல்களை அளித்து கேட்டவரை ஒரு நொடி மிரளவைத்து இருக்கிறார்கள் அதிகாரிகள். இது குறித்து தர்மேந்திர சுக்லா கூறுகையில், "கொரோன பெருந்தொற்று காலத்தில் வாங்கப்பட்ட மருந்துகளுக்காக விடப்பட்ட டெண்டர்கள் மற்றும் பில் பேமேண்ட் விவரங்கள் ஆகியவற்றின் விவரங்களை கேட்டு நான் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்து இருந்தேன்.
ஆனால், எனக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. ஒரு மாதம் ஆன பிறகும் எனக்கு பதில் வராததால் மேல் முறையீட்டு அதிகாரி சரத் குப்தாவிடம் முறையிட்டேன். அவரும் எனது மனுவை ஏற்றுக்கொண்டு, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் நான் கேட்ட கேள்விகளுக்கான பதிலை வழங்க வேண்டும் என்றும் சம்பந்தபட்ட அதிகாரிக்கு உத்தரவிட்டார். ஒருமாத காலக்கெடுவை கடந்து விட்டதால், பதிலை அளிப்பதற்காக எந்த கட்டணமும் இன்றி இலவசமாக வழங்கப்படும் எனவும் உத்தரவிட்டு இருந்தார்.
மேல் முறையீட்டு அதிகாரியின் உத்தரவுக்கு பிறகு நான் கேட்ட கேள்விகளுக்கான பதிலை அதிகாரிகள் வழங்கினர். ஆனால், அங்குதான் எனக்கு ஒரு அதிர்ச்சியே காத்திருந்தது. 40 ஆயிரம் பக்கங்கள் கொண்ட பதில்களை எனக்கு அளித்தனர். மலைபோல் குவிந்து இருந்த இந்த பேப்பர் கட்டுக்களை கொண்டு செல்வதற்காக எனது எஸ்.யூ.வி காரை எடுத்து வந்தேன். டிரைவர் இருப்பதற்கு கூட இடம் இல்லாத அளவுக்கு கார் முழுவதும் பேப்பர் கட்டுக்களை நிரப்பி வைத்தோம்" என்றார்.
இது குறித்து மேல் முறையீட்டு அதிகாரியான மாநில சுகதாரத்துறையின் இணை இயக்குனர் சரத் குப்தாவிடம் கேட்ட போது, ஆர்.டி.ஐ கேட்கப்பட்ட கேள்விகளுக்கு 30 நாட்களுக்குள் பதிலளித்தால், அளிக்கப்படும் ஆவணத்திற்கான செலவு தகவல் பெறுபவரிடம் இருந்து பெறப்படும். ஆனால், 30 நாட்களை கடந்து விட்டதால், இலவசமாக வழங்க உத்தரவிட்டேன். உரிய நேரத்தில் தகவல்களை அளிக்காமல் அரசு கருவூலத்திற்கு ரூ 80 ஆயிரம் இழப்பு ஏற்படுத்திய சம்பந்தப்பட்ட ஊழியர் மீது தக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்" என்றார்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications